scorecardresearch

அடுத்த முறை சிப்ஸ் பாக்கெட்டை பிரிக்கும்போது இதை யோசிக்க மறக்காதீங்க: உடல் பருமனுக்கு இதுதான் காரணம்

அடுத்த முறை சிப்ஸ் பாக்கெட்டை எடுக்கும்போதும் , பிஸ்கட் பாக்கெட்டை பிரிக்கும்போதும் இதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் . நீங்கள் வெறும் அதிக கலோரிகளை மட்டும் சாப்பிடவில்லை. இது உங்கள் உணவு செரிமாணமாகும் செயல் முறையை பாதிக்கிறது மேலும் குடலின் செயல்பாட்டையும் பாதிக்கிறது.

நாம் தொடர்ந்து அதிக கொழுப்பு சத்துள்ள அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொண்டால், நமது மூளை தேவையான உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துகொள்ளும் செயல்முறையில் குழுப்பம் ஏற்படும். இதனால் உடலுக்கு எப்போது உணவு தேவை என்பதில் மூளைக்கு குழப்பம் ஏற்படும் இதனால் மூளை குழம்பிவிடுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அஸ்டோசைட்ஸ் என்பவை நமது நியூரான்ஸை தூண்டுகிறது. இவை தூண்டப்படுவதால், நமது வயிறு சரியான நேரத்தில் உணவால் நிரப்பப்படுகிறதா என்று கவனிக்கிறது. தொடர்ந்து 10 முதல் 12 நாட்கள் கொழுப்பு நிறைந்த அதிக கலோரிகளை சாப்பிடுபோது இந்த அஸ்டோசைட்ஸ் பாதிக்கப்பட்டு குழம்பிவிடுகிறது. இதனால் உடல் சரியான கலோரிகளை எடுத்துகொள்கிறதா என்று கவனிக்கும் ஆற்றலை இழக்கிறது.

இயற்கையாகவே நமது உடலில் பசி ஏற்படும்போது, நமது மூளை உடலுக்கு உணவு வேண்டும் என்பதை நமது குடலில் சுரக்கும் ஹார்மோன்கள் மூலம் மூளைக்கு சிக்னல் அனுப்பப்படுகிறது.

ஆனால் நாம் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு உணவுகளை சாப்பிடும்போது நமது மூளைக்கு இதுதான் சரியான உணவு என்ற தவறான செய்தி சென்று விடுகிறது. ஒருவகையில் நமது மூளைக்கு இனிப்பு நிறைந்த கலோரிகள் அதிகமான உணவுதான் சந்தோஷத்தை தருபவையாக இருக்கிறது.

இதனால் நமது மூளை செயற்கையான பசியை தூண்டுகிறது. ஆனால் உண்மையில் பார்த்தால் நமக்கு அப்போது பசி ஏற்படாது. ஆனால் நமது மூளை அந்த உணவு சாப்பிட வேண்டும் என்று சிக்னல் அனுப்புவதால் நமக்கு பசிப்பதுபோல உணர்வை உருவாக்குகிறது.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Know how eating high fat and high calorie foods can rewire your brain to eat for pleasure

Best of Express