நேஹா சசி
Know Your City: கடல் சார்ந்த உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் சுந்தரி அக்கா ஸ்டால் இருபது ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
சுந்தரி எஸ், அல்லது ‘சுந்தரி அக்கா’ என்று வாடிக்கையாளர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரே இந்த ஸ்டாலின் உரிமையாளராவர்.
கடல் சார்ந்த உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற இவரது ஸ்டால், ‘சுந்தரி அக்கா கடை’ என்று அழைக்கப்படுகிறது. மீன் குழம்பு சாப்பாடு, வறுத்த இறால், கணவாய், நண்டு உள்ளிட்டவை இங்கு விற்கப்படுகின்றன.
2000ஆம் ஆண்டு, சுந்தரியும் அவரது கணவரும் இணைந்து வீட்டில் டிபன் சமைத்து பாக்கெட்டுகளில் மக்களுக்கு விநியோகம் செய்து வந்தனர். அந்த சமயத்தில் தான் இந்த ஸ்டால் தொடங்கப்பட்டது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, இட்லி, தோசை போன்ற காலை உணவுகளுக்கு ஒரு சிறிய ஸ்டால் வைத்தார்கள். பிறகு, மதிய உணவுகளை படிப்படியாக தனது ஸ்டாலில் விற்க ஆரம்பித்தார்கள். மீன் குழம்புடன் கூடிய சாதம் 30 ரூபாயாகவும், முட்டையுடன் கூடிய சாதம் 10 ரூபாயாகவும் ஆரம்பத்தில் விற்றனர்.

சுந்தரி அக்கா ஸ்டாலில் சுமார் 20 பேர் உதவியாளராக பணிபுரிகிறார்கள். கடையை திறக்கும் வரை வாடிக்கையாளர்கள் அவர்கள் விருப்பத்துடன் காத்திருக்கிறார்கள்.
இந்த கடையில் காத்திருக்கும் வேளையில், குழந்தைகள், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுடன் ஜோடியாக மக்கள் வருவதை நம்மால் பார்க்கமுடியும். சுந்தரி அமர்ந்திருக்கும் டோக்கன் கவுண்டரைச் சுற்றி பெரிய வரிசை உணவுக்காக காத்திருக்கும்.
சுந்தரி அக்கா ஸ்டாலுக்கு அதிக அளவில் கூட்டம் அதிகரிக்கும் பொழுது, அவள் சொல்வதைக் கேட்கலாம், “ஓ தயவு செய்து என் மீது கருணை காட்டுங்கள்! நான் என் டிபன் கூட சாப்பிடவில்லை”, என்று. அந்த அளவிற்கு அவருடைய கடின உழைப்பை காணமுடியும்.
சுந்தரி தனது வீட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று, மீன் வாங்குவதற்காக தினமும் 1 மணிக்கு எழுந்து செல்வதாக கூறினார்.
“நாங்கள் சீக்கிரம் சென்றால், எங்கள் விருப்பப்படி மீன் கிடைக்கும்,” என்று அவர் கூறுகிறார்.
அதன் பிறகு, அவள் அன்றைய காய்கறிகளை வாங்க செல்வதாகவும், காலை 8.30 மணியளவில், கடையில் தனக்கு உதவி செய்யும் ஊழியர்கள் உணவு தயாரிக்கத் தொடங்குகிறார்கள் என்று அவர் கூறுகிறார். சுந்தரிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், அவர்களும் தொழிலில் உதவுகிறார்கள்.
சுந்தரி தனது ஸ்டாலில் முதலீடு அதிகம், அதுவும் ஓரளவு லாபம் என்று கூறுகிறார். இருப்பினும், தனது ஊழியர்களுக்கு திருப்திகரமான சம்பளம் கிடைப்பதை உறுதி செய்வதாக அவர் கூறுகிறார். அவர்களில் அதிகமானவர்களை பணியமர்த்துவதில் மட்டுமே அவர் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் கூறுகிறார்.
சுந்தரி அக்கா கடை எல்லா நாட்களிலும் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். முன்பு ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும் என்று சுந்தரி கூறுகிறார். வார இறுதி நாட்களில் கடையைத் திறந்து வைக்குமாறு வாடிக்கையாளர்கள் கேட்டபோதுதான், ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவர்கள் செயல்படத் தொடங்கினர்.
“எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் இங்கு சேவை செய்ய வந்துள்ளோம்,” என்று அவர் கூறுகிறார்.
பெங்களூரு, ஓசூர், கோயம்புத்தூர், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் பலருக்கு இந்த ஸ்டால் பிடித்தமான உணவு இடமாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.
அவரது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி கேட்டபோது, ”மற்ற இடங்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்தும் திட்டம் இல்லை, அப்படி செய்தால் உணவின் தரம் குறைந்துவிடும்”, என்று அவர் கூறுகிறார்.