மட்டனை வைத்துதான் எப்போதும் கோலா உருண்டை செய்வோம். ஆனால் இதை நாம் மீல் மேக்கரிலும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
மீல் மேக்கர்
வெங்காயம்
கருவேப்பிலை
பொட்டுக் கடலை பொடி
வெங்காயம்
கரம் மசாலா
உப்பு
எண்ணெய்
சோம்பு
செய்முறை :
முதலில் மீல் கேக்கரை சுடு நீரில் போட்டு, பிழிந்து எடுக்கவும். தொடர்ந்து அதை ஒரு மிக்ஸியில் போட்டு, சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். தொடர்ந்து இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அத்துடன் நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, கரம் மசாலா, உப்பு, பொட்டு கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தொடர்ந்து 20 நிமிடங்கள் கழித்து உருண்டைகளாக பிடித்து பொறித்தெடுக்கவும்.