இன்றைய காலத்தில் முக்கிய பிரச்சனையாக எடை அதிகரிப்பு இருக்கிறது. முறையான உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் இதனை நாம் தவிர்க்கலாம். அப்படி உடல் எடை அதிகரிப்பால் கஷ்டப்படும் மக்களுக்கு நாம் நம்முடைய இணைய பக்கத்தில் அன்றாட மருத்துவர்கள் வழங்கிய குறிப்புகளை வழங்கி வருகிறோம். இதேபோல், உடல் எடை குறைப்புக்கு உதவும் உணவுகள் குறித்தும் பகிர்ந்து வருகிறோம்.
அந்த வகையில், உடல் எடை குறைய காலையில் வழக்கமாக சாப்பிட்டு வரும் இட்லி, தோசைக்குப் பதிலாக கொள்ளு தானியத்தில் தயார் செய்த கொள்ளு இட்லி, கொள்ளு தோசை என சாப்பிட்டு வந்தால், அவை உடல் எடை குறைய உதவும்.
கொள்ளு தானியத்தில் அதிகளவு புரதச்சத்தும், நார்ச்சத்தும் இருக்கிறது. இது தேவையற்ற அதிகப்படியான கொழுப்பை குறைத்து உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள உதவுகிறது. அவ்வகையில், கொள்ளு தானியத்தில் எப்படி கொள்ளு இட்லி, கொள்ளு தோசை செய்வது என்று இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு – 2 கப்
இட்லி அரிசி – 3 கப்
உளுந்து – 1 1/4 கப்
வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்
நீங்கள் செய்ய வேண்டியவை
2 கப் கொள்ளு எடுத்து அதனை இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றுடன் சேர்த்து சுமார் 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு, இவற்றை கிரைண்டரில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு மாவு அரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவை ஒரு இரவு முழுவதும் அப்படியே மூடி வைத்துக் கொள்ளவும். காலையில் பொங்கி வந்த மாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதனை இட்லி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி மூடி வைத்து விடவு. தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு இட்லி தட்டில் இட்லியை ஊற்றி 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைத்து எடுக்கவும். இப்போது, பஞ்சு போன்ற மிருதுவான கொள்ளு இட்லி தயார். இந்த மாவை வைத்து தோசை ஊற்றினால், கொள்ளு தோசை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“