ஒரு முறை கொள்ளு பயிறு வைத்து, முறுக்கு செய்து இப்படு செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு- 2 கப்
பச்சரிசி மாவு - 1 கப்
கொள்ளு பயிறு - 4 கப்
கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி- 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் கொள்ளு பயிறை சுத்தம் செய்து அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். அதன் பின் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
இப்போது, மற்றொரு பாத்திரம் எடுத்து கடலை மாவு, பச்சரிசி மாவு, வேகவைத்த கொள்ளு, கருப்பு எள், பெருங்காயத் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து பிசையவும். சப்பாத்தி மாவு பதத்துக்கு மென்மையாக பிசைந்து கொள்ளவும். தேவை என்றால் மீண்டும் உப்பு சேர்த்து கலந்து பிசையவும். மாவு தயார் செய்த பின், அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். மாவு கலவையை முறுக்கு பிடியில் போட்டு தேவையான வடிவ அச்சில் போட்டு அப்படியே எண்ணெய்யில் பிழிந்து விடவும். கொஞ்சம் கொஞ்சமாக அச்சு வடிவத்தில் பிழிந்து விடவும். முறுக்கை திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். பொன்னிறமாக போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவை, ஆரோக்கியமான கொள்ளு பயறு முறுக்கு ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“