இந்நிலையில் இந்த கொண்டக்கடலை குருமா நிச்சயம் சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை
தேங்காய்
இஞ்சி
பச்சை மிளகாய்
முந்திரி
பிரியாணி இலை
கிராம்பு
ஏலக்காய்
சீரகம்
வெங்காயம்
தக்களி
நறுக்கிய பூண்டு
எலுமிச்சை
செய்முறை : இரவு முழுவதும் ஊறிய பிறகு, கொண்டைக்கடலையை நன்றாக வேக வைக்க வேண்டும் 4 முதல் 5 விசில் வரை விட வேண்டும். தேங்காய், பெருஞ்சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி ஆகியவற்றை அரைக்க வேண்டும். இந்நிலையில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, கிராம்பு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து நறுக்கிய தக்காளி. நன்றாக வதங்கியதும் மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி சேர்க்கவும். தொடர்ந்து வேக வைத்த கொண்டக்கடலையை சேர்க்க வேண்டும். அதன் தண்ணீருடன் சேர்த்து கொள்ளுங்கள். தற்போது அரைத்ததை தேங்காய் கலவையை சேர்த்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க வையுங்கள். கடைசியாக எலுமிச்சை சாறு புழியுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil