உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான கொள்ளுவை பயன்படுத்தி சுவையான சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். கொள்ளுவில் அதிகளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கும் எளிய செயல்முறையின் மூலம் நீங்களும் சத்தான கொள்ளு சாதத்தை வீட்டில் செய்யலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கொள்ளு வெந்த சாதம் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் தேங்காய் துருவல் எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு கறிவேப்பிலை மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில் கொள்ளுவை நன்றாக வறுத்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் போன்ற காய்கறிகளை பொடியாக நறுக்கி தயாராக வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளித்த பொருட்களுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். வதக்கிய மசாலாவில் அரைத்து வைத்த கொள்ளு பொடி மற்றும் வெந்த சாதத்தை சேர்த்து நன்கு கலக்கும் வரை கிளறவும்.
கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து ஒருமுறை கலந்து அடுப்பை அணைக்கவும். இப்போது சுவையான மற்றும் சத்தான கொள்ளு சாதம் தயார். இதனை சூடாக பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.