பல் இல்லாதவர்கள் கூட சாப்பிடக்கூடிய அளவிற்கு ஒரு சுவையான ஸ்வீட் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதற்கு வெறும் 5 பொருள் போதும் திருவிழாக்களில் விற்கப்படும் பால் கடம்பு வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
பால்
சர்க்கரை
ஏலக்காய் பொடி
அகர் அகர்
எண்ணெய்
பால் பவுடர்
செய்முறை
சுத்தமான பசும்பால் எடுத்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். இரண்டு கொதி விட்டு அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
இதில் தேவைப்பட்டால் பால் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். பால் பவுடர் இல்லாமலும் செய்யலாம். பால் பவுடர் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
எனவே பால் பவுடர் ஒரு கப் போட்டு மிதமான சூட்டில் கிளறிவிட்டுக் கொண்டு இருக்க வேண்டும். பால் கொதிக்கும் போது அதில் சிறிது ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும்.
பின்னர் அந்த பாலி கடம்பு கொட்டியாக ஜெல்லி மாதிரி வருவதற்காக அதில் அகர் அகர் அல்லது கடல் பாசி சேர்க்க வேண்டும். பின்னர் கெட்டியாக ஒரு கரைந்த மாவு பதத்திற்கு வரும்போது டம்ளரில் சிறிது எண்ணெய் தேய்த்து அதில் காய்ச்சிய பால் ஊற்ற வேண்டும்.
PAAL KADAMBU | பால் கடம்பு இனி வீட்டுலேயே செய்யலாம்
இதை ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மணி நேரத்தில் கெட்டியாகிவிடும். வெளியில் வைத்தால் இரண்டு மணி நேரத்தில் ஆறி கட்டியாகி விடும். பின்னர் ஒரு கத்தியை வைத்து ஓரங்களில் கீறி விட்டு எடுத்தால் ட்ம்ளர் வடிவில் அந்த பால் கடம்பு கிடைக்கும்.
எந்த வடிவில் வேண்டுமானாலும் இதை ஊற்றிக் கொள்ளலாம் எல்லோருக்கும் பிடித்த இந்த பால் கடமை பல் இல்லாதவர்கள் கூட சாப்பிடலாம்.
இனிப்பு சுவை இருக்கும் என்பதால் பெரியவர்கள், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சமாக சாப்பிடலாம். அதுவும் மருத்துவர் பரிந்துரையின் பேரில் எடுத்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“