கொரியன் லவ்வர்ஸ் எல்லார்த்துக்குமே கொரியன் ஃபுட் ட்ரை பண்ணனும்னு ஆசை இருக்கும். ஆனா அதை எங்க சாப்பிடுவது அதை எப்படி வாங்கி சாப்பிடுவது என்று ஒரு டவுட் இருந்துட்டே இருக்கும். அப்படி இருக்க எல்லாரும் கொரியன் ஃபுட் வீட்டுலயே ட்ரை பண்ணி சாப்பிடலாம்.
Advertisment
ஜாஸ் வித் மாம் அபிஷியல் யூடியூப் பக்கத்தில் கொரியன் ஸ்டைல் புட் எப்படி செய்வது என்று செய்து காட்டி இருக்காங்க. அதன்படி கொரியன் ஸ்டைல் மேங்கோ கிம்ச்சி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாங்காய் முள்ளங்கி கேரட் ஸ்பிரிங் ஆனியன் உப்பு மிளகாய்த்தூள் சில்லி ஃபிளேக்ஸ் ஆப்பிள் வெங்காயம் இஞ்சி பூண்டு வினிகர்
Advertisment
Advertisements
செய்முறை
இரண்டு மாங்காய் எடுத்து அதை நீட்ட நீட்டமாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும். அதேபோல கேரட், முள்ளங்கி, ஸ்பிரிங் ஆனியன் எடுத்து கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு தட்டில் போட்டு தேவைக்கு அதிகமாக உப்பு போட்டு ஊறவைக்கவும்.
இதில் நன்கு தண்ணீர் விட்டு இருக்கும் அந்த தண்ணீர் இல்லாமல் இந்த காய்கறிகளை மட்டும் வடித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதனை வேற பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் விட்டு இரண்டு மூன்று முறை கழுவி எடுத்துக் கொள்ளவும்.
இதற்கு மசாலா ரெடி செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய ஆப்பிள், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து தண்ணீர் இல்லாமல் பேஸ்ட் மாதிரி அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனை அந்த காய்கறியுடன் சேர்த்து அதில் மிளகாய் தூள், சில்லி ஃப்ளேக்ஸ், வினிகர் எல்லாத்தையும் சேர்த்து ஊறவைத்து எடுத்தால் மேங்கோ கிமிச்சி ரெடியாகிவிடும். இதனை ஒரு கப்பில் சேகரித்து வைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.
பழையசோறு, வெரைட்டி ரஸ் உடன் சேர்த்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.