கொத்தவரங்காய் பொறியல் ஆக மட்டுமே சாப்பிட்டிருப்போம். சில சமயங்களில் சாலை ஓர உணவகத்தில் கூழ், மோர் குடித்தால் அப்போது இந்த மொறு மொறு கொத்தவரங்காய் வற்றல் சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் சுட்டெரிக்கும் இந்த வெயிலில் தயிர் சாதம், பழைய சோறு உடன் இந்த மொறு மொறு சைட் டிஷ் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொத்தவரங்காய் - ¼ கிலோ
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் கொத்தவரங்காய்யின் இரு ஓரங்களையும் கட் செய்து கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து கொதிக்க விட்டு பிறகு, இந்த கொத்தவரங்காயை போடவும். கொத்தவரங்காய் வெந்ததும் இறக்கி விடவும். இப்போது தண்ணீர் வடித்து கொத்தவரங்காயை வெயிலில் நன்றாக காய வைக்கவும். உப்பு, மஞ்சள் தூள் சுவை அதில் இருக்கும். முறுகலாக உடையும் பதம் வரை காயவிட வேண்டும்.
அவ்வளவு தான், காற்று புகாத டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது வேண்டுமோ அப்போது எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil