எத்தனையோ பழங்கள் காய்களில் ஜூஸ் போட்டு குடித்து இருப்போம். ஆனால் இப்படி ஒரு ஜூஸ் குடித்து இருக்க மாட்டோம். அப்படிப்பட்ட கொத்தவரங்காய் ஜூஸில் எவ்வளவு நன்மைகள் உண்டு என்று தெரியுமா?
கொத்தவரங்காய் ஜூஸ் எடை குறைய உதவுகிறது. கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளை பலப்படுத்தவும். மேலும் கர்ப்பிணி பெண்கள் கர்ப்பமடைந்த நாளிலிருந்து வாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.
கொத்தவரங்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொத்தவரங்காய்
எலுமிச்சை சாறு
தேன்
செய்முறை
தேவையான அளவு கொத்தவரங்காயை எடுத்து நன்கு கழுவி பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் மீண்டும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்து எடுத்து வடிகட்டவும். வடிகட்டி எடுத்த சாரில் அரை எலுமிச்சம் பழம் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.குறிப்பாக இந்த ஜூஸ் நாட்டு மருந்து சாப்பிட்டு பத்தியத்தில் இருப்பவர்கள் எடுக்கக்கூடாது.
சத்துக்கள் நிறைந்த கொத்தவரங்காய் ஜுஸ் | Kothavarangai Juice in Tamil | Cluster beans Juice in Tamil
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“