ஒரு முறை இப்படி கோவை பேமஸ் அரைச்சுவிட்ட மீன் குழம்பு செய்து பாருங்க. மாதம்பட்டி ரங்கராஜ் ரெசிபி .
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் எண்ணெய்
1 கப் சின்ன வெங்காயம்
15 வத்தல்
1 கொத்து கருவேப்பிலை
8 பூண்டு
1 ஸ்பூன் சீரகம்
கால் டீஸ்பூன் மஞ்சள்
5 டேபிள் ஸ்பூன் மல்லிப் பொடி
4 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
2 ஸ்பூன் வெங்காயம் நறுக்கியது
எலுமிச்சை அளவு புளி
உப்பு
மீன் துண்டுகள் 6
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயம், வத்தல், சேர்த்து கிளரவும். நன்றாக வதக்கவும். தொடர்ந்து கருவேப்பிலை சேர்க்கவும். பூண்டு சேர்த்து கிளரவும். சீரகம் சேர்த்து கிளரவும். மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். மல்லிப் பொடி சேர்க்கவும். 6 நிமிடங்கள் வரை வதக்கவும். இதை சூடு ஆறியதும் அரைத்துகொள்ளவும். ஒரு மண் சட்டியில் 4 ஸ்பூன் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, கொஞ்சம் வெங்காயம் நறிக்கியதை சேர்த்து கிளரவும். அரைத்த பேஸ்டை சேர்க்கவும். தொடர்ந்து தண்ணீர் சேர்க்கவும். அதன் பிறகு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க வேண்டும். இதில் மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க வையுங்கள். 15 நிமிடத்தில் மீன் வெந்ததும், அடுப்பை அணைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“