இப்படி ஒரு முறை கோவைக்காய் பொறியல் செய்து பாருங்கள். குறைந்த கலோரிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
கோவைக்காய்
வெங்காயம்
மஞ்சள் பொடி
மிளகாய் பொடி
பச்சை மிளகாய்
உப்பு
செய்முறை : கோவைக்காய்களை வட்டமாக வெட்ட வேண்டும். மேலும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து நறுக்கிய கோவைக்காய்களை சேர்க்கவும். தொடர்ந்து அதில் மஞ்சள் பொடி, மிளாகாய் பொடி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். கிட்டதட்ட 18 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். சூப்பரான கோவைக்காய் பொறியல் ரெடி.