கோவக்காய் உடல் நலத்திற்கு சிறந்தது. நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. கோவக்காய்யில் பொறியல், சட்னி, குழம்பு என பல ரெசிபிக்கள் செய்யலாம். அந்த வகையில் இங்கு புதுவிதமாக கோவக்காய் கொண்டு பக்கோடா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோவைக்காய் - அரை கிலோ
வெங்காயம் - 2
சோம்பு - 1/2 ஸ்பூன்
கடலை மாவு - 4 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
குழம்பு மிளகாய்தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் & உப்பு - தேவையான அளவு.
செய்முறை
முதலில் கோவக்காய்யை எடுத்து சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல் வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தில் கோவக்காய், வெங்காயம், சோம்பு, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். கைகள் பயன்படுத்தி பிசைய வேண்டும். தண்ணீர் ஊற்றாமல் கலக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
இப்போது அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கோவக்காய் மாவு கலவையை போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான மொறு மொறு கோவக்காய் பக்கோடா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“