கோவக்காய் நீரிழிவு போன்ற சர்க்கரை நோய்களைத் தடுப்பது, உடல் எடையை குறைக்க, இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கும் சிறந்தது. அதிக இரும்பு சத்து உள்ளது. எனவே உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். மேலும் செரிமானத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல், புண்கள் மற்றும் நோய்கள் போன்ற பிற இரைப்பை குடல் கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது.
அவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கோவக்காய் பொறியல் நடிகர் ரவிக்கு மிகவும் பிடிக்குமாம். அது எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோவக்காய்
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கருவேப்பிலை
மிளகாய்த்தூள்
கரம் மசாலாத்தூள்
மஞ்சள் தூள்
கொத்தமல்லித்தூள்
தேங்காய்
நிலக்கடலை
செய்முறை
கோவைக்காயை கழுவி வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித்தூள் இவை அனைத்தையும் சேர்த்து எண்ணெயில் வதக்கி விடவும்.
பின்னர் இதில் நறுக்கி வைத்துள்ள கோவக்காயையும் சேர்த்து வதக்க வேண்டும். இது வேக வைக்கும் போது தேவையான அளவு உப்பை சேர்த்து கலந்து வேக விடவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மூடி வைத்து வேகவிடவும்.
#Jeyam Ravi's Moms Care #Moms Unconditional Love #Kovakkai Curry #trending #shorts | indu's samayal
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். கோவக்காய் நன்கு வெந்ததும் அதில் இந்த தேங்காயையும் நிலக்கடலை அரைத்ததையும் சேர்த்து கலந்து விடவும். தேங்காய் சேர்ப்பதன் மூலம் சுவையை கூட்டிக் கொடுக்கும்.
இதனை சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். கோவக்காய் பொரியல் செய்து விட்டு அதில் சாதத்தை கிளறி கொடுக்கலாம். கோவைக்காயை வாரத்தில் இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம் சர்க்கரை நோயாளிகள் மூன்று நாட்களும் சேர்த்து சாப்பிடலாம்.