scorecardresearch

கோயில் புளியோதரை மாதிரி டேஸ்ட் வரணுமா? இப்படி பொடி செய்து ஸ்டோர் பண்ணி வையுங்க

நீங்கள் கோயிலில் கிடைக்கும் புளியோதரை போல் சுவை கிடைக்க வேண்டும் என்றால் இப்படி பொடி செய்து, அதை சேமித்து வையுங்கள். தேவையான நேரத்தில் புளியோதரை செய்யலாம்.

புளியோதரை

நீங்கள் கோயிலில் கிடைக்கும் புளியோதரை போல் சுவை கிடைக்க  வேண்டும் என்றால் இப்படி பொடி செய்து, அதை சேமித்து வையுங்கள். தேவையான நேரத்தில் புளியோதரை செய்யலாம்.

தேவையான பொருட்கள்

ஒரு கப் கடலை பருப்பு

முக்கால் கப் உளுந்து

ஒரு டீஸ்பூன் தனியா

ஒரு டீஸ்பூன் மிளகு

ஒரு டீஸ்பூன் சீரகம்

அரை டீஸ்பூன் வெந்தயம்

ஒரு கை பிடி கருவேப்பிலை

10 வரமிளகாய்

பெரிய உருண்டை அளவு புளி

பெருங்காயம்

உப்பு

செய்முறை:  ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலை பருப்பை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து உளுந்தம்  பருப்பை தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து அதே பாத்திரத்தில் தனியா, மிளகு, சீரகம், வெந்தயம்  சேர்த்து வறுக்க வேண்டும். இதையும் எடுத்துவைத்து கொள்ளுங்கள். இதுபோல கருவேப்பிலை வறுக்க வேண்டும். தொடர்ந்து அந்த பாத்திரத்தில் மிகவும் குறைவாக எண்ணெய் ஊற்றி வரமிளகாய்களை வறுக்க வேண்டும். தொடர்ந்து அதில் புளியை சேர்த்து வறுக்க வேண்டும். இந்நிலையில் இவை எல்லாவற்றையும் உப்பு, பெருங்காயத்துடன் அரைத்து கொள்ளுங்கள். இந்த பொடியை நீங்கள் ஸ்டோர் செய்து வைத்து புளியோதரை செய்யலாம்.   

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Kovil puliyotharai podi recipe

Best of Express