புளியோதரை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் கோயில் ஸ்டைல் புளியோதரை என்றாலே சுவை அவ்வளவு ருசியாக இருக்கும். அப்படிப்பட்ட புளியோதரை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு
உளுந்தம் பருப்பு
மிளகு
மல்லி
வெந்தயம்
காய்ந்த மிளகாய்
வேர்க்கடலை
முந்திரி
நல்லெண்ணெய்
கடுகு
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்
கருவேப்பிலை
புளிக்கரைசல்
மஞ்சள் தூள்
உப்பு
வெல்லம்
அரிசி சாதம்
செய்முறை:
கோவில் ஸ்டைல் புளியோதரை தயார் செய்வதற்கு நமக்கு முதலில் புளியோதரை பொடி செய்ய வேண்டும். அதற்கு ஒரு பாத்திரம் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு, மிளகு, மல்லி, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும்.
தொடர்ந்து அவற்றோடு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து இவை நன்கு ஆறியதும் மிக்சியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் சமையல் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பிறகு அவற்றோடு வேர்க்கடலை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பிறகு அவற்றோடு முன்பு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிய பிறகு அவற்றை ஒரு மூடியால் மூடி 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
இந்த கலவை நன்கு கொதித்த பின்னர் அவற்றோடு முன்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக்கொள்ளவும். நன்கு கொதி வந்ததும் வடித்து வைத்துள்ள சாதத்துடன் தனியாக வறுத்து வைத்துள்ள பருப்பு கலவையை முதலில் சேர்க்கவும். பிறகு கொதிக்க வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“