புளியோதரை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் கோயில் ஸ்டைல் புளியோதரை என்றாலே சுவை அவ்வளவு ருசியாக இருக்கும். அப்படிப்பட்ட புளியோதரை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெந்தயம்
எள்ளு
மிளகு
கொத்தமல்லி
காய்ந்த மிளகாய்
எண்ணெய்
கடுகு
கருவேப்பிலை
பெருங்காயத்தூள்
உளுந்து பருப்பு
புளிகரைசல்
மஞ்சள் தூள்
உப்பு
சாதம்
வேர்க்கடலை
கடலை பருப்பு
செய்முறை
கோவில் ஸ்டைல் புளியோதரை தயார் செய்வதற்கு நமக்கு முதலில் தேவையானது புளியோதரை பொடி. எனவே அவை எப்படி தயார் செய்து கொள்ளலாம். புளியோதரை பொடிக்கு முதலில் சிறிய பாத்திரம் அல்லது பேன் எடுத்துக் கொள்ளவும்.
அவை சூடானதும் அதில் வெந்தயம், எள்ளு, மிளகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் வறுத்து அரைக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், எண்ணெய், கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து தனியாக எடுக்கவும்.
கோவில் புளியோதரை மாதிரி இருக்கும். ரொம்ப அற்புதமான வாசமா... அருமையா இது மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க….
பின்னர் அதை வேறொரு தட்டில் மாற்றி விட்டு அதஏ கடாயில் புளி கரைசலை ஊற்றி கொதிக்க விட்டு கெட்டியானதும் அரைத்த பொடியை சேர்க்கவும். நன்கு கொதிவந்து பச்சை வாசம் நீங்கியதும் தாளிப்பை சேர்த்து சாதம் போட்டு கிளற வேண்டும்.
இறுதியாக அதில் வறுத்த நிலைக்கடலையை சேர்த்து கிளறினால் கோயில் ஸ்டைல் புளியோதரை ரெடியாகிவிடும்.