தை பொங்கல் வர ஆரம்பித்து விட்டது இனி அனைவர் வீடுகளிலும் சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது என்று தேட ஆரம்பித்து விடுவீர்கள். அப்படி நிறைய வீடியோக்கள் பார்த்து யாரும் குழம்பி தவிக்க வேண்டாம். செஃப் தீனா ஸ்டைலில் ஈஸியா கோயிலில் செய்யும் பொங்கல் போலவே வீட்டில் சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது என்று பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 4 டீஸ்பூன்
வெல்லம் - 2 கப்
தேங்காய் - 2 துண்டு
முந்திரி பருப்பு
உலர் திராட்சை
நெய் - 6 முதல் 7 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
பச்சரிசி பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு 2 மணி நேரம் ஊறவைத்து கழுவி எடுத்து குக்கரில் தண்ணீர் ஊற்றி வேக விடவும். நன்கு குழைய விசில் விட்டு மூடியை திறந்து மிதமான சூட்டில் வைக்கவும். பின்னர் அதில் நெய் ஊற்றி கலந்து விடவும். வெல்லத்தை தண்ணீர் ஊற்றி வேகவைத்து கரைத்து வடிகட்டி எடுத்து சாதத்தில் ஊற்றவும்.
கோவில் சர்க்கரை பொங்கல் | How to Make Sweet Pongal | Diwali Sweet | CDK 679 | Chef Deena's Kitchen
இவை அனைத்தையும் கலந்து விட்டு உப்பு, ஏலக்காய் பொடி போட்டு கிளறவும். பின்னர் தாளிப்பிற்காக ஒரு கடாயில் நெய் ஊற்றி தேங்காய் வறுத்து முந்திரி, காய்ந்த திராட்சை போட்டு வறுத்து பொங்கலில் கொட்டி கிளறிவிடவும்.
பின்னர் இதனை வாழை இலையில் வைத்து பரிமாறினால் அதன் மனமே சாப்பிட தூண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“