கோகுலாஷ்டமி 2024 சமையல்: இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு வெல்ல சீடை செய்யுங்க. ரொம்பவே ஈசியான ரெசிபி.
தேவையான பொருட்கள்
1 கப் வெல்லம்
2 கப் அரிசி மாவு
2 ஸ்பூன் கடலை மாவு
1 ஸ்பூன் வெள்ளை எள்ளு
1 ஸ்பூன் தேங்காய் துருவல்
ஒரு சிட்டிகை உப்பு
1 ஸ்பூன் பட்டர்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து, தண்ணீர் சேர்த்து வெல்ல பாகை தாயாரிக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, வெள்ளை எள்ளு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, பட்டர் சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் வெல்ல பாகு சேர்த்து, பிசைந்து கொள்ளுங்க. தொடர்ந்து சீடை வடிவில் மாற்றவும். எண்ணெய்யை சூடானதும், பொறித்து எடுக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“