ராகியில் கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கியமான தாதுக்கள் அதிகம் உள்ளது, இது உங்கள் விலைமதிப்பற்ற குழந்தைக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்தை வழங்கும் குழந்தைகளுக்கு சிறந்த உணவாகவும் அமைகிறது. எனவே ராகியை வைத்து குழந்தைகளுக்கு சுவையான ராகி தோசை செய்து கொடுக்கலாம்.
குடும்பஸ்தன் மணிகண்டனுக்கு கூட ராகி தோசை மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறார். இவ்வளவு சத்துக்கள் நிறைந்த ராகியில் தோசையை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ராகி
உப்பு
நல்லெண்ணெய்
நாட்டுச்சர்க்கரை
செய்முறை
ராகி மாவை தோசை பதத்திற்கு ஏற்ப கரைத்துக்கொள்ளவும். பின்னர் கல்லில் தோசையை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக விடவும்.
கேழ்வரகு தோசை#ராகி தோசை#Ragi dosai
தோசை வெந்ததும் இறக்கி மேலே நாட்டுச்சர்க்கரை வைத்து மேலே சிறிது நல்லெண்ணெய் ஊற்றினால் நாட்டுச்சர்க்கரை உருகி தோசையோடு சேர்த்து வைத்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.
இது மணிகண்டனுக்கு மிகவும் பிடிக்கும் என்று குடும்பஸ்தன் மணிகண்டன் ஹர்ஷூஸ் கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.