/indian-express-tamil/media/media_files/2025/02/06/Va00cpJwUQDkJkSYKEbt.jpg)
கும்பகோணம் கடப்பா
இட்லி, தோசைக்கு ஒரு சூப்பரான குழம்பு தான் இந்த ரெஸிபி. சாம்பார்,சட்னி செய்து எப்போதும் சாப்பிடுகிறீர்களா? அப்போ இனி கும்பகோணம் ஸ்டைல் கடப்பா செய்து சாப்பிடுங்கள். ஈஸியான கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 3
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1 கப்
பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பற்கள்
இஞ்சி
பச்சை மிளகாய் - 10
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பிரியாணி இலை
பட்டைகிராம்பு
ஏலக்காய்
அன்னாசிப்பூ
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
கறிவேப்பிலை
தக்காளி - 2 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை
செய்முறை
ஒரு குக்கரில் இரண்டு கப் தண்ணீர், அரை கப் பாசி பருப்பு, நறுக்கிய உருளை கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, கலந்து, குக்கரை மூடி ஐந்து விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும். பின்னர் உருளைக்கிழங்கை எடுத்து ஆறவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய அரை கப் தேங்காய், ரெண்டு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை, ஒரு டீஸ்பூன் கசகசா, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஆறு பல்லு பூண்டு, ஒரு துண்டு நறுக்கிய இஞ்சி, பத்து பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, சோம்பு , பொடிசா நறுக்கின வெங்காயம், கருவேப்பிலை, நறுக்கின ரெண்டு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
கும்பகோணம் கடப்பா | Kumbakonam Kadappa Recipe in Tamil | Side Dish for Idly Dosa
அரைத்த மசாலா விழுது சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும். இவை அனைத்தையும் நன்றாக கொதிக்க வைத்து வேக வைத்த பருப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
இவை அனைத்தும் நன்றாக கொதித்ததும், வெந்த பருப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும். அடுத்ததாக மசித்த உருளை கிழங்கை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும். மேலே சிறிது நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால் போதும் கும்பகோணம் கடப்பா ரெடியாகி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.