scorecardresearch

இந்த கும்பகோணம் கடப்பா சமைத்து கொடுத்தா இட்லி மிஞ்சாது: சுவையான சைடிஷ்

வழக்கமாக நாம் அரைக்கும் சட்னியால், பலரும் இட்லியை விரும்பி சாப்பிடமாட்டார்கள். ஆனால் இந்த கும்பகோணம் கடப்பா சமைத்து கொடுத்தா இட்லி காணமல் போய்விடும்.

recipe

வழக்கமாக நாம் அரைக்கும் சட்னியால், பலரும் இட்லியை விரும்பி சாப்பிடமாட்டார்கள். ஆனால் இந்த கும்பகோணம் கடப்பா சமைத்து கொடுத்தா இட்லி காணமல் போய்விடும்.  

தேவையான பொருட்கள்.

பாசி பயறு- 1கப்

உருளைக்கிழங்கு – 3

மஞ்சள் பொடி

எண்ணெய்

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சு இலை

வெங்காயம்

பச்சை மிளகாய்

தக்காளி

தேங்காய்

இஞ்சி

பூண்டு

கசகசா

சோம்பு

பொட்டுக்கடலை

செய்முறை : பாசி பயிறை நன்றாக கழுவி, அதில் உருளைகிழங்கு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் அதை மசித்து தனியாக வைத்துக்கொள்ளவும். தொடர்ந்து தேங்காய், இஞ்சி, கசகசா, சோம்பு, பொட்டுக்கடலை ஆகியவற்றை அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில், பட்டை, கிராம்பு, பிரிஞ்சு இலை ஆகியவற்றை சேர்க்கவும். தொடந்து அதில் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். நிறம் மாறியதும் தக்காளி சேர்க்கவும் தொடர்ந்து இந்த தேங்காய் அரைத்த கலவையை சேர்க்கவும். நன்றாக கொதிக்கவைக்க வேண்டும் தொடர்ந்து அரைத்து வைத்திருந்த பாசி பயிறு கலவையை சேர்த்து உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.   

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Kumpakonam kadampa recipe for breakfast

Best of Express