/indian-express-tamil/media/media_files/2025/01/31/YdqyThR7P6CB5aLCDEHX.jpg)
குறிஞ்சான் கீரையின் மகத்துவத்தைப் பற்றி டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளதை அப்படியே இங்கே தருகிறோம். Image Screenshot: youtube/ Doctor Karthikeyan
சித்த மருத்துவ மூலிகைகள் குறித்து, இயற்கை உணவுகள் குறித்தும் அதன் மருத்துவப் பயன்கள் குறித்தும் டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் கூறி வருகிறார். அந்த வகையில், குறிஞ்சான் கீரையின் மகத்துவத்தைப் பற்றி டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளதை அப்படியே இங்கே தருகிறோம்.
குறிஞ்சான் கீரையைப் பற்றி டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில், “சிறுகுறிஞ்சான் பெருங்குறிஞ்சான் என்று இரண்டு வகையான கீரைகள் இருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக பாம்புக்கடி, சர்க்கரை வியாதி, மலேரியா காய்ச்சல் பல்வேறு நோய்களுக்கு இந்த கீரை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. நம் இதை ஒரு மருந்தாக பார்க்காமல் ஒரு உணவு முறையாக பார்க்க போகிறோம்.
இந்த குறிஞ்சான் கீரையை நாம் எப்படி உணவாக எடுத்துக் கொள்ளலாம், எத்தனை முறை எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொண்டு, அதை நாம் பயன்படுத்தி சில ஆரோக்கியப் பிரச்னைக வராமல் தடுத்துக் கொள்ளலாம் அல்லது குணமாகி கொள்ளலாம். அதனால். இன்று இந்த சிறுகுறிஞ்சான் கீரையை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த குறிஞ்சான் கிரியை லேசாக கழுவி விட்டு சாப்பிட்டாலே அதற்கு பிறகு நீங்கள் என்ன சாப்பிட்டாலும் இனிப்பே தெரியாது ஏனென்றால் இதற்கு அந்த அளவுக்கு கசப்புத்தன்மை இருப்பது மட்டுமல்லாமல் இதை சாப்பிட்ட பிறகு நாம் சாப்பிடும் எந்த இனிப்பு பண்டத்தில் இனிப்பையும் நாம் கொஞ்ச நேரத்துக்கு உணர முடியாது.
அந்த அளவுக்கு இது ஒரு சக்தி வாய்ந்த கீரை, இதே போல இந்த கீரையை நாம் எடுத்துக் கொள்ளும்போது, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால். இந்த குறிஞ்சான் இலைகளுடன் கொஞ்சம் சீரகம் போட்டு இரவு தண்ணீரில் ஊறவைத்து, காலையில அந்த தண்ணீரை வடிகட்டி, அந்த தண்ணீரை மட்டுமே குடித்தால் கூட சர்க்கரை அளவு கட்டுப்படுவதை பார்க்க முடிகிறது. ஆகவே, இது எந்த வகையிலாவது உடம்பில் சர்க்கரை அளவை குறைக்கிறது.
முதலில் நம்முடைய நாக்கு நாக்கு இனிப்புக்கு அடிமை, இனிப்பு பண்டங்களைப் பார்த்தாலோ, பதார்த்தங்களை பார்த்தாலோ உடனே சாப்பிட வேண்டும் என்று மனம் பரபரக்கும், இதுதான் இனிப்பு ஈர்ப்பு என்று சொல்வோம். இனிப்பு நம்முடைய மனதை ஈர்க்கிறது. அதனால், இந்த இனிப்பை ஈர்க்கும் மனநிலையை இந்த குறிஞ்சான் கீரை குறைக்கிறது.
இந்த குறிஞ்சான் கீரை இனிப்பை கூட நமக்கு பிடிக்காமல் செய்துவிடும். நாம் இதை உள்ளே சாப்பிடும்போது இந்த குறிஞ்சான் கீரை நம் குடல் பகுதியில் சர்க்கரையை உறிஞ்சும் வேலையையும் தடுக்கிறது.
இந்த குறிஞ்சான் கீரையை நாம் சமையலில் பயன்படுத்தும் போது சர்க்கரை அளவு சராசரி சர்க்கரை அளவு மற்றும் எச்பிஏ1சி அளவு குறையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, சர்க்கரை இல்லாதவர்களும் இந்த குறிஞ்சான் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த குறிஞ்சான் கீரை சர்க்கரை வந்த பிறகு சாப்பிடும் போது சர்க்கரைக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரை அளவை குறைத்துக் கொள்ளும் அளவுக்கு உறுதியானது.
இப்படி சராசரியான சர்க்கரை அளவை குறைப்பதால் சர்க்கரை நோயால் வரக்கூடிய புண்கள், கண் பாதிப்பு, நரம்பு பாதிப்பு போன்ற எல்லா விஷயங்களுமே சர்க்கரை அளவு சராசரியாக குறைவாக இருக்கும் போது இந்த பிரச்சனைகள் குறையும். அதனால், இந்த குறிச்சான் இலையை சூப்பாக செய்து சாப்பிடுவது என்பது சர்க்கரை உள்ளவர்களுக்கும் சர்க்கரை இல்லாதவர்களுக்கும் ரொம்ப நல்லது. இந்த குறிஞ்சாண் கீரை சர்க்கரை அளவை குறைப்பது எப்படி என்றால், இன்சுலின் சுரப்பு கணையத்திலிருந்து நடப்பதற்கு உதவியாக இருக்கிறது. இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகப்படுத்துகிறது, இன்சுலின் எதிர்ப்பு என்கிற விஷயத்தை குறைக்கிறது.
குறிஞ்சான் கீரை என்று சொல்லக்கூடிய இந்த கீரையின் சசப்புத் தன்மை காரணமாக அதிகம் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. ஆனால், இந்தக் கீரையில் சர்க்கரை அளவைக் குறைக்ககூடிய மகத்துவம் இருப்பதை புரிந்துகொண்ட ஆங்கில மருத்துவத்தில் இது குறித்து பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கிறது.
ஜிம்னிமா சில்வெஸ்ட்ரே (Gymnema Sylvestre) என்கிற பெயரில் அழைக்கப்படும் குறிஞ்சான் கீரை கொடி மாதிரி வேலியில் எளிதாகப் படரக்கூடியது. காலிகா அஃபிஸினாலிஸ் (Galiga Officinalis) என்கிற ஒரு செடி இருக்கிறது. அந்த செடியிலிருந்து எடுக்கக்கூடிய மருந்துதான் இன்றைக்கு சர்க்கரை வியாதிக்கு பரவலாகப் பயன்படுத்தி வரும் மெக்ஃபார்மின் என்கிற ஒரு மாத்திரை. மெக்ஃபார்மின் மாத்திரையே சாப்பிடாத சர்க்கரை நோயாளிகளே இருக்க முடியாது. இந்த செடி ஜிம்னிமா சில்வெஸ்ட்ரே (Gymnema Sylvestre) என்கிற பெயரில் அழைக்கப்படும் குறிஞ்சான் கீரை குடும்பத்தைச் சேர்ந்ததுதான். அதனால், இந்த குறிஞ்சான் கீரை சர்க்கரை அளவைக் குறைப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது என்பது புரிந்திருக்கும். அதனால், இதை மட்டுமே நம்பி குறிஞ்சான் கீரை மட்டும் சாப்பிடுவேன், மருந்துகளை சாப்பிடமாட்டேன் என்று சொல்லிவிடாதீர்கள். இதனால், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குதான் பலன் அளிக்கும். இதனுடைய பக்கவிளைவு என்ன என்று இன்னும் முழுவதுமாக தெரியாது. ஓரளவுக்கு நமக்கு தெரியும். இந்த கீரைக்கு சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மை இருக்கிறது என்பதால், நாம் வாரத்திற்கு இரண்டு முறை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
அதே போல, இந்த குறிஞ்சான் கீரைக்கு இதய நோய்களையும் குறைக்கக்கூடிய வல்லமை உண்டு. இந்த குறிஞ்சான் கீரை கொழுப்புகளின் அளவைக் குறைக்கும். இது ஆராய்ச்சிகளில் 20% கெட்ட கொழுப்பான எல்.டி.எல் கொழுப்புகளைக் குறைக்கிறது. அதே போல, இந்த கீரையை எடை குறைப்புக்கும் எடுத்துக்கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், இந்த குறிஞ்சான் கீரைக்கு நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய தன்மை உண்டு.
இந்த குறிஞ்சான் கீரையில் இருக்கக்கூடிய டேனின் (Tanin), சபோனின் (Saponin) இவை நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கக்கூடியது. அதனால், இந்த குறிஞ்சான் கீரையை நம்முடைய உணவில் அடிக்கடி பயன்படுத்துவது ரொம்ப முக்கியம்.
இந்த கீரையை நீங்கள் கடையில் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கிராமப்புறங்களில் எளிதாகக் கிடைக்கக்கூடியது. இந்த குறிஞ்சான் கீரையை எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்றால், இந்த குறிஞ்சான் இலைகளையும் சீரகத்தையும் இரவே தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி அந்த தண்ணீரை மட்டும் குடித்தால், நிறைய பலன்கள் இருக்கிறது. இரண்டாவது, இந்த குறிஞ்சான் இலையை ஒரு டீ மாதிரியும் பருகலாம். இந்த இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு 5 நிமிடம் நல்லா கொதித்தற்கு அப்புறம், அடுப்பை ஆஃப் செய்துவிட்டு, 15 நிமிடம் நன்றாக ஆறவிட்டுவிட்டால், அந்த நேரத்தில் குறிஞ்சான் இலையில் இருக்கக்கூடிய சாறு அந்த தண்ணீரில் இறங்கியிருக்கும். அதை நாம் ஒரு டீ மாதிரி நாம் பருகினாலும், அதனுடைய நன்மைகள் எல்லாமே நமக்கு கிடைக்கும். இன்னொரு விஷயம் நாம் குறிஞ்சான் கீரையை சூப்பாகவும் பயன்படுத்தலாம்.
குறிஞ்சான் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரில் வரமிளகாய், இடிச்ச பூண்டு, நசுக்கிய சின்ன வெங்காயம், சீரகம், மிளகு இதையெல்லாம் போட்டு நன்றாகக் கொதிக்கவிடலாம். தேவையான அளவுக்கு கல் உப்பு போட்டு, அதற்கு பிறகு, மஞ்சள்தூள் போட்டுவிட்டால், அதனுடைய நிறம், மணம், சுவை எல்லாமே ஒரு சூப்பு தன்மைக்கு வந்துவிடும். அதனால், ஒரு 5 நிமிடத்தில் குறிஞ்சான் கீரை சூப்பு ரெடி. சூப்பு குடித்த பிறகு, மீதி இருக்கக்கூடிய கீரை நல்ல சட்னி அரைக்கக்கூடிய பதத்தில் இருக்கும். அதை சட்னியாக அரைத்து இட்லி, தோசையுடன் சாப்பிடலாம். இல்லையென்றால், சோற்றில் எண்ணெய்விட்டு இந்த குறிஞ்சான் கீரை சட்னியை பிசைந்து சாப்பிடலாம்.
இந்த குறிஞ்சான் கீரையை சாப்பிடுவதால் ஏதாவது பக்கவிளைவு வருமா என்றால், இது சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. நீங்கள் சர்க்கரையைக் குறைக்க மாத்திரையை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், இந்த குறிஞ்சான் கீரையை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி எடுத்துகொண்டால், சர்க்கரை அளவு மிக அதிகமாக குறைவதால் வாந்தி வருதல், தலைவலி, தலைசுற்றல், கை, கால் நடுக்கம் போன்ற உணர்வு இருக்கும். இதெல்லாம், சர்க்கை அதிக அளவில் குறைவதற்கான அறிகுறிகள். அதனால், கட்டாயம் இந்த குறிஞ்சான் கீரையை தவிர்த்துவிடுங்கள்.
அதே போல, ஆஸ்பிரின் மாத்திரையை சாப்பிடுபவர்கள் இந்த குறிஞ்சான் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதே போல, இந்த கீரை சாப்பிடும்போது, ஒவ்வாமையும் ஏற்படலாம். மற்றபடி, இந்த குறிஞ்சான் கீரை ஒரு நல்ல கீரைதான்.” என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.