மணி கணக்கில் இட்லி தோசை மாவு அரைக்க நிற்க வேண்டிய அவசியம் இனி தேவை இல்லை. சீக்கிரமாக இண்ஸ்டண்டா இட்லி தோசைக்கு மாவு அரைப்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி
பச்சரிசி
வெந்தயம்
உளுந்து
உப்பு
அவல்
செய்முறை
ஒரு டம்ளரில் 5 டம்ளர் இட்லி அரிசி எடுத்துக் கொள்ளவும். அதே டம்ளரில் ஒரு டம்ளர் பச்சரிசி எடுத்து இது இரண்டையும் நன்கு கழுவ வேண்டும். பின்னர் உடனே ஒரு பரவலான தட்டில் வைத்து வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனை ரவை பாதத்திற்கு அரைத்து வந்து மாவை சளித்து தனியாகவும் அரிசி ரவையை தனியாகவும் எடுத்து கொள்ளவும்.பின்னர் ஒரு கப்பில் இட்லி சுடுவதற்கு தேவையான அளவு அரிசி ரவைய சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு 4 மணி நேரம் ஊற விடவும். அதிகப்படியான தண்ணீரை வடித்து சிறிது கெட்டியான பதத்தில் ஊற விடவும்.
இந்த ரவையுடன் உளுந்து மட்டும் அரைத்து soft இட்லி செய்யலாம்/Soft idly recipe
எந்த கப்பில் இட்லி ரவை எடுத்துமோ அதே கப்பில் முக்கால் கப் உளுந்து, அரை கப் கெட்டி அவல், சிறிது வெந்தயம் கழுவி ஊறவைக்க வேண்டும். இவை அனைத்தும் நன்கு ஊறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த அரிசி ரவையையும் அரைத்து வைத்த உளுந்து மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும். மாவு நன்கு புளித்து வந்ததும் அதில் சிறிது உப்பு சேர்த்து கலந்து எப்போதும் போல இட்லி ஊற்றி எடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“