எப்போதும் நீங்கள் அரிசி அளக்கும் கப்பில் மூன்று கப் ரேஷன் புழுங்கல் அரிசி எடுத்து கொள்ளவும். அதில் ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் உளுந்து அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து மூன்றையும் ஒன்றாக கலந்து 4 முதல் 5 முறை கழுவி எடுத்து கொள்ளவும்.
தேவையான பொருட்கள்
ரேஷன் புழுங்கல் அரிசி - 3 கப்
பச்சரிசி - 1 கப்
உளுந்து - 1கப்
சாதம்/ அவல் - முக்கால் கப்
மாவு அரைக்க தண்ணீர் - 4 கப்
இப்போது நன்கு கொதிக்க வைத்த சுடுதண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். தண்ணீர் சூடு ஆறும் வரை ஊற வைக்க வேண்டும். அதற்கு எப்படியும் 5 மணி நேரம் ஆகும். எனவே மாவு ஆட்டுவதற்கும் சரியாக இருக்கும். இந்த முறையை பயன்படுத்தும்போது மாவை மிக்ஸியிலேயே அரைக்கலாம்.
பின்னர் அரிசி ஊறியதும் தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸி ஜாரில் அரைக்க ஆரம்பிக்கலாம். அரிசி அளந்த கப்பில் மீண்டும் ஊற வைத்த அரிசியை அளந்து எடுத்து கொள்ளலாம். ஒரு நான்கு கப் அரிசி அதனுடன் கால் கப் சாதம் அல்லது அவல் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சிறிது சிறிதாக அரைக்கலாம் .
எனவே இதில் குறிப்பிட்ட அளவில் மொத்தமாக ஊறவைத்த அரிசி அனைத்திற்கும் சேர்த்து முக்கால் கப் சோறு மற்றும் நான்கு கப் தண்ணீர் தேவை. இந்த அளவில் மாவு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து மூடி போட்டு வைத்து விடலாம். காலையில் மாவு புளிச்சதும் தேவியான அளவு மாவை எடுத்து இட்லி ஊற்றலாம். இட்லி புசுபுசுவென்று சாப்பிடவே மிருதுவாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“