தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த நடிகை குஷ்பூ ஆனால் அவருக்கு பிடித்த பாயாசம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். மிஸ் வாவ் தமிழா யூடியூப் பக்கத்தில் குஷ்பூவுக்கு பிடித்த பாயாசத்தை பற்றி அவரே பகிர்ந்து இருக்கிறார். அதில் கூறியபடி நாமும் பாயாசம் செய்யலாமே.
தேவையான பொருட்கள்
ஏலக்காய்
உலர் திராட்சை
முந்திரி
பாதாம்
நெய்
சேமியா
பால்
சர்க்கரை
செய்முறை
ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் உலர் திராட்சை பாதாம் முந்திரி ஏலக்காய் அனைத்தையும் போட்டு வறுக்கவும்.
பின்னர் அதில் சேமியாவை சேர்த்து நெய்யில் நன்றாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் தேவையான பாலை ஊற்றவும்.
அடிப்பிடிக்க விடாமல் கலந்து விட்டு கொதிக்க விட்டு மீண்டும் சிறிது சிறிதாக பால் சேர்க்க வேண்டும்.
இரண்டு முறை பால் சேர்த்த பின் தேவையான அளவு சர்க்கரை நாட்டு சர்க்கரை ஏதாவது ஒன்றை சேர்த்து கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
குஷ்பூவின் இரகசிய பாயாசம்! Kushboo Style Saffron Payasam Recipe | Simple Dessert
சர்க்கரை போட்டதும் அடிப்பிடிக்கும் எனவே அடி பிடிக்க விடாமல் கலந்து விட வேண்டும்.
பாயாசம் கெட்டியாக இருந்தால் சுவையாக இருக்கும் எனவே கெட்டியாகும் வரை கொதிவிட வேண்டும்.
பின்னர் மீதமுள்ள பாலை மூடினால் அவ்வளவுதான் பாயாசம் ரெடி ஆகிவிடும்.