வெண்டைக்காய் பொறியல் எப்படி செய்தாலும் வழவழப்பாக வருகிறது என்று புலம்புபவர்கள் இனி இந்த மாதிரி செய்து பாருங்கள். சாஃப்ட் அண்ட் க்ரன்சியாக எப்படி செய்வது என்று கார்திஸ்குக்புக் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். அரை கிலோ வெண்டைக்காய் பொறியல் செய்தாலும் போதாது அந்த வகையில் அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 5 பல்
வெங்காயம் - 1/2
வெண்டைக்காய் - 1/4 கிலோ
தூள் உப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில், ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடவும். கடுகு பொரிந்ததும், ஒரு டீஸ்பூன் உளுந்து மற்றும் இரண்டு வரமிளகாய் சேர்க்கவும். ஐந்து பல் பூண்டை பொடியாக நறுக்கி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய அரை வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய கால் கிலோ வெண்டைக்காயை சேர்த்து ஐந்து நிமிடம் எண்ணெயிலேயே வதக்கவும். ஒரு டீஸ்பூன் தூள் உப்பு சேர்த்து கலந்து, மேலும் இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு புரட்டி விடவும். கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால், ஒரு சூப்பரான வெண்டைக்காய் பொரியல் தயார்.
இந்த செய்முறையை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். லஞ்ச் பாக்ஸ்க்கு மிகவும் சுவையான ஒரு டிஷ் ஆகும். இதில் சாதத்தை கொட்டி கிளறி லஞ்ச் பாக்ஸ்க்கும் செய்து கொடுக்கலாம். சுவையாக இருக்கும். பிள்ளைகள் வெண்டைக்காயை இனி ஒதுக்காமல் விருப்பப்பட்டு சாப்பிடுவார்கள்.