வெண்டைக்காயை பயன்படுத்தி எத்தனையோ டிஷ்கள் செய்திருப்போம். ஆனால், வெண்டைக்காய் துவையல் எவ்வாறு செய்யலாம் என்று பாடகியும், நடிகையுமான கிரேஸ் கருணாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். அதனை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்,
எண்ணெய்,
உளுத்தம் பருப்பு,
கொத்தமல்லி விதைகள்,
காய்ந்த மிளகாய்கள்,
சின்ன வெங்காயம்,
சீரகம்,
புளி.
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி விதைகள், நான்கு காய்ந்த மிளகாய்கள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
இதையடுத்து, 12 சின்ன வெங்காயம், 6 பூண்டு, பொடியாக நறுக்கிய 5 வெண்டைக்காய்கள் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்க வேண்டும். இப்போது, கால் ஸ்பூன் சீரகம், உப்பு, சிறிய நெல்லிக்காய் அளவில் புளி ஆகிய அனைத்தும் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
இவை அனைத்தும் ஆறிய பின்னர், மிக்ஸியில் சேர்த்து பசை பதத்திற்கு அரைக்கலாம். இவ்வாறு அரைத்த பின்னர் அதன் மீது லேசாக நல்லெண்ணெய் ஊற்றினால் சுவையான வெண்டைக்காய் துவையல் தயாராகி விடும்.