வெண்டைக்காயை வதக்கி... இப்படி ஒருமுறை கார குழம்பு வச்சுப் பாருங்க; இன்னும் இருக்கான்னு கேட்பாங்க!

வெண்டைக்காய் குழம்பு வலவலப்பாக இருக்கிறதா? அதனால் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவதில்லையா அப்போ வெண்டைக்காயை வதக்கி போட்டு கார குழம்பு மாதிரி செய்து கொடுங்கள்.

வெண்டைக்காய் குழம்பு வலவலப்பாக இருக்கிறதா? அதனால் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவதில்லையா அப்போ வெண்டைக்காயை வதக்கி போட்டு கார குழம்பு மாதிரி செய்து கொடுங்கள்.

author-image
WebDesk
New Update
சப்பாத்திக்கு சைட் டிஷ் வெண்டைக்காய் மசாலா.. இந்த புது காம்போ ட்ரை பண்ணலாமா?

சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும். 

Advertisment

அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.

ஆனால் சுவையாக சமைத்தால் அனைவருக்கும் பிடிக்கும். அப்படியாக வலவலப்பாக இருக்கும் வெண்டைக்காய் காரக்குழம்பு கூட வலவலப்பு இல்லாமல் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால் இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்கள். வலவலப்பு இல்லாமல் வெண்டைக்காய் காரக்குழம்பு செய்யலாம்.

தேவையான பொருட்கள்

Advertisment
Advertisements

வெண்டைக்காய்
எண்ணெய்
கடுகு
சீரகம்
வெந்தயம்
பூண்டு
வெங்காயம்
உப்பு 
தக்காளி 
மஞ்சள் தூள் 
குழம்பு தூள் 
சாம்பார் தூள் 
கருவேப்பிலை
புளிக்கரைசல்

செய்முறை

முதலில் வெண்டைக்காயை எண்ணெயில் நன்கு வதக்கி எடுக்கவும். பின்னர் அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும். பின்னர் அதில் பூண்டு, சின்ன வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி வேக விடவும். 

அடுத்ததாக்க நறுக்கிய தக்காளியை சேர்த்து கலந்து விடவும். சுவைக்கு கருவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயமும் தக்காளியும் நன்கு வதங்க வேண்டும். அப்போதுதான் குழம்பு சுவையாக இருக்கும். 

மஞ்சள் தூள், குழம்பு தூள், சாம்பார் தூள், புளிக்கரைசல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்து திக்காக வந்ததும் அதில் வதக்கிய வெண்டைக்காயையும் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ளலாம்.

காரக்குழம்பு கெட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். எனவே குழம்பு கெட்டியாகும் வரை உங்களுடைய அளவிற்கு ஏற்றார் போல கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ளவும்.

Amazing benefits of ladies finger

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: