உங்கள் ஹார்மோன்கள் சீராக இருக்க, கருப்பையை தாங்கும் வகையில் உருவாக்கவும், கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கவும் உதவும், ஒரு சத்தான இயற்கையான லட்டு எப்படி செய்வது என்றும் அதனை எடுத்துகொள்வது பற்றியும் டாக்டர் ஜெயரூபா கூறுகிறார். இதுகுறித்து அவர் ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றியும் பார்ப்போம்.
Advertisment
மாதவிடாய் முடிந்த பின் 10 நாட்கள் என்பது, பெண்கள் கருத்தரிக்க மிகப்பெரும் வாய்ப்புள்ள முக்கியமான காலக்கட்டமாகும். இந்த காலத்தில் கருமுட்டை வளர்ந்து வெளியேறும். அதாவது, ஓவுலேஷன் நடைபெறும். இந்த ஓவுலேஷன் காலத்தில் சரியான உணவுகளை எடுத்துக்கொண்டால், கருத்தரிக்க எளிதாகவும், உடல்நலமும் மேம்படும் வகையிலும் செயல்படும் என்று டாக்டர் ஜெயரூபா கூறுகிறார்.
ஓவுலேஷன் முடிந்த பின் அதாவது மாதவிடாய் வருவதற்கு முந்தைய 10 நாட்கள் (ப்ரீமென்ஸ்ட்ருவல் காலகட்டம்) ஆகும். அந்த நேரத்தில் இந்த சுவையான சத்தான லட்டு சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்.
லட்டு செய்ய தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
சூரியகாந்தி விதைகள் கருப்பு எள் (குழந்தைக்கு முயற்சிப்பவர்கள் சேர்க்க கூடாது) சோம்பு பேரிச்சம் பழம் ஏலக்காய் வெந்தயம் (குழந்தைக்கு முயற்சிப்பவர்கள் சேர்க்கலாம்)
செய்முறை
சூரியகாந்தி விதை, கருப்பு எள் ஆகியவற்றை வறுத்து அதனுடன் சோம்பு, பேரிச்சை, ஏலக்காய், வெந்தயம் சேர்த்து அரைத்து லட்டு மாதிரி பிடிக்கலாம்.
இந்த லட்டின் நன்மைகள் :
கருத்தரிப்பை ஊக்குவிக்கும் ஹார்மோன்களை சீராக வைத்துக்கொள்ளும் ப்ரீமென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம் குறைக்க உதவும் செரிமான கோளாறுகளை சரிசெய்யும் நல்ல இரவு தூக்கத்தை வழங்கும் தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்தும் நல்ல கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு கிடைக்கும்
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.