scorecardresearch

லேட் நைட் ரொம்ப பசிக்குதா?  இந்த பழக்கத்தை கைவிட இதுதான் வழி

நம் இரவு உணவை சாப்பிட்டலும், நள்ளிரவில் பசி எடுக்கும் எண்ணம் உண்டாகும். இதனால் நாம் ஐஸ்கிரீம், சிப்ஸ் மற்றும் கிடைத்த எல்லாவற்றையும் நாம் சாப்பிடுவோம். இந்த ஆவல் ஏன் ஏற்படுகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் போதிய, புரோட்டீன் இல்லை என்றால் இதுபோல பசி எடுக்கும்.

லேட் நைட் ரொம்ப பசிக்குதா?  இந்த பழக்கத்தை கைவிட இதுதான் வழி

நம் இரவு உணவை சாப்பிட்டலும், நள்ளிரவில்  பசி எடுக்கும் எண்ணம் உண்டாகும். இதனால் நாம் ஐஸ்கிரீம், சிப்ஸ் மற்றும் கிடைத்த எல்லாவற்றையும் நாம் சாப்பிடுவோம். இந்த ஆவல் ஏன்  ஏற்படுகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் போதிய,  புரோட்டீன் இல்லை என்றால் இதுபோல பசி எடுக்கும். இதனால் ஒரு நாள் முழுவதும் சரியான டையட்டை பின்பற்ற வேண்டும்.

சத்துக்கள் உள்ள காலை உணவு மற்றும் மதிய உணவும் , தொடர்ந்து குறைவாக இரவு உணவு எடுத்துக்கொள்ளுங்கள். மேலும் இரவில் படம் பார்க்கும்போது, நமக்கு தெரியாமல் சிப்ஸ் மற்றும் பிஸ்கட்டை நாம் சாப்பிடுவோம். இதை நாம் கைவிட வேண்டும்.

மன அழுத்தத்தால் பாதிகப்பட்ட நபர்கள்,  இரவில் உடலுக்கு கேடான உணவுகளை சாப்பிடுகிறார்கள். அப்படி உணவுகளை சாப்பிடுவதால், அவர்களது மன அழுத்தம் குறைவதாக அவர்கள் நினைத்து கொள்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற ஆய்வும் இதை உறுதிப்படுத்துகிறது. இதனால் மன அழுத்தத்தை குறைக்க வழிகள் தேட வேண்டும்.        

நாம் சரியாக தூங்கவில்லை என்றால், நமது உடல் க்ரோடிஸ்சால் (cortisol) என்ற ஹார்மோனை சுரக்க வைக்கும்.  இந்த ஹார்மோன் கொழுப்பு சத்து மற்றும் அதிக இனிப்பு உள்ள உணவுகளை சாப்பிட தூண்டும். மேலும் தூக்கம் இன்மையால் அடிக்கடி பசிக்கும் ஹார்மோனை உடல் சுரக்கிறது.

மேலும் ஆரோக்கியமான உணவுகளை நாம் தொடர்ந்து சாப்பிட்டால் இந்த உணர்வு ஏற்படாது. 

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Late night eating habit steps to control