பொதுவாக காரப் பொரி, மசாலாப் பொரி கேள்விப்பட்டு இருப்போம், கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனால் பொரியில் கட்லெட் கூட செய்யலாமாம். அது எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம். சிப்பிள் ஸ்நாக்ஸ் ரெசிபியாகவும் இது இனி இருக்கும்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு – 2
- டலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
- இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன்,
- கருவேப்பிலை. மல்லித்தழை – சிறிதளவு,
- சில்லி பிளக்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- பொரி – 4 கப்
செய்முறை
முதலில் உருளைக்கிழங்குகளை வேகவைத்து தோல் உரித்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் 4 கப் அளவு பொரியை போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில்
மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, அரைத்து எடுத்த பொரியை ஒன்றாக போட்டுக் கொள்ளுங்கள்.
அதனுடன் கடலை மாவு, வெங்காயம், இஞ்சி துருவல், கருவேப்பிலை, மல்லித்தழை, சில்லி பிளக்ஸ் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பிசைய வேண்டும். (நான்கு வர மிளகாய்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்தால் சில்லி ஃபிளக்ஸ் தயார். பச்சை மிளகாயை கூட நறுக்கி போட்டுக் கொள்ளலாம்)
அடுத்து, கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இந்த மாவை பிசைந்தால் கட்லெட் மாவு போல நமக்கு கிடைக்கும். கட்லெட் செய்வது போல் மாவை உருண்டை பிடித்து தட்டையாக மாற்றிக் கொள்ளவும். பொரியில் ஏற்கனவே உப்பு இருப்பதால், கவனமாக சேர்க்கவும்.
இப்போது, கடாய்யில் எண்ணெய் ஊற்றி, எப்போதும் போல், பொரி கட்லெட் உருண்டைகளையும் மிதமான தீயில் போட்டு எடுக்கவும். பொன்னிறமாக சிவந்து வந்ததும் எடுத்துவிடலாம். சாஸ் வைத்து சூடாக பரிமாறலாம். குழந்தைகளுக்கு இந்த ரெசிபி பிடிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“