10 நிமிடத்தில் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இப்படி செய்யுங்க.. குழந்தைகளுக்கு பிடிக்கும்! | Indian Express Tamil

10 நிமிடத்தில் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இப்படி செய்யுங்க.. குழந்தைகளுக்கு பிடிக்கும்!

உருளைக்கிழங்கு சாட் ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

10 நிமிடத்தில் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இப்படி செய்யுங்க.. குழந்தைகளுக்கு பிடிக்கும்!

சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். விதவிதமாக, புது வகையாக சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். மாலை வேளையில் டீ, காபி குடிக்கும்போது ஏதாவது ஸ்நாக்ஸ் வைத்து சாப்பிடுவதை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டிருப்பர். குழந்தைகளும் பள்ளி விட்டு வந்து ஸ்நாக்ஸ் சாப்பிடுவார்கள். அந்தவகையில் எல்லோருக்கும் பிடித்த மற்றும் ஈஸியாக செய்து முடிக்கும் வகையில் உருளைக்கிழங்கு சாட் ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வேக வைத்த உருளைக் கிழங்கு – 16

நறுக்கிய வெங்காயம் – ¼ கப் அளவு

நறுக்கிய தக்காளி – ¼ கப் அளவு

எலுமிச்சை சாறு – 1 ½ ஸ்பூன்

சாட் மசாலா – 1 டீ ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி – 1 டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

வேக வைத்த உருளைக் கிழங்கை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அதை பெரிய பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்க்கவும்.

இப்போது அதில் எலுமிச்சை சாறு, சாட் மசாலா, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவு தான் சிம்பிள், ஈஸி உருளைக்கிழங்கு சாட் (Aloo chaat) ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Learn to make simple and tasty aloo chaat recipe