கொத்தமல்லி இலையும் புதினாவும் மிகச்சிறந்த ஜீரணத்தை சரி செய்யும் இலைகள் ஆகும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
இதுகுறித்த அவர் AடூZ ஹெல்த்தி லைஃப்ஸ்டைல் யூடியூப் பக்கத்தில் கூறி இருப்பதாவது,
நம்முடைய ஜீரண மண்டலம் நன்றாக இருந்தால் உணவில் இருந்து உக்கிரகிக்கும் தன்மை சீராக இருக்கும். ஜீரண மண்டலத்தை அன்றாடம் சரி செய்வதற்கு கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி உதவியாக இருக்கும்.
அதைத் தவிர வாய்வுத் தொல்லை அல்லது தொடர்ந்து சரியான உணவுகள் சாப்பிடாததால் ஏற்படும் வயிற்றுப் புண்களை குணமாக்கும் சக்தியும் புதினாவிற்கு உண்டு.
கொத்தமல்லி புதினா உடலுக்கு நல்லதா?#drsivaraman #Mint and coriander leaves benefits #trending#shorts
எனவே புதினா சட்னியையும் கொத்தமல்லி சட்னியையும் மாறி மாறி உணவில் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் மருத்துவர் சிவராமன்.
அவ்வளவு சத்துக்கள் நிறைந்த புதினா கொத்தமல்லி வைத்து சட்சி செய்வது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
சீரகம்
பூண்டு
இஞ்சி
புதினா
கொத்தமல்லி
தேங்காய்
பொட்டுக்கடலை
புளி
பச்சை மிளகாய்
உப்பு
கடுகு
கறிவேப்பிலை
செய்முறை
ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சீரகம், பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கவும். இப்போது புதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் அல்லது சிறிதாக சுருங்கும் வரை வதக்கவும்.
இந்தக் கலவையை முழுவதுமாக குளிர்வித்து, மிக்சிக்கு மாற்றவும். அதனோடு தேங்காய், பொட்டுக்கடலை, புளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைக்கவும்.
அரைத்த கொத்தமல்லி புதினா சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். இப்போது கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, சட்னியோடு சேர்க்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.