வீட்டுல ரவை, தயிர் இருக்கா? மீந்து போன பழைய சாதத்தில் மொறு மொறு தோசை ரெடி!
நம்முடைய வீடுகளில் சில நேரங்களில் மதியம் வடித்த சாதம் மீதம் இருக்கும். அந்த மீந்து போன பழைய சாதத்தில் மொறு மொறு தோசை எப்படி எளிதில் தயார் செய்து அசத்தலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
நம்முடைய வீடுகளில் சில நேரங்களில் மதியம் வடித்த சாதம் மீதம் இருந்து விடும். அதனை வடித்த நீர் ஊற்றி பழைய சோறுக்கு போடுவோம். ஆனால், அவற்றில் மொறு மொறு தோசை செய்யலாம் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Advertisment
அந்த வகையில், மீந்து போன பழைய சாதத்தில் மொறு மொறு தோசை எப்படி எளிதில் தயார் செய்து அசத்தலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பழைய சாதம் - 1 கப் ரவை - 1 கப் தயிர் - 1/2 கப் (புளிப்பானது) தண்ணீர் - 1 கப்
நீங்கள் செய்ய வேண்டியவை:
ஒரு பாத்திரம் எடுத்து அதில், பழைய சாதம், ரவை, தயிர், தண்ணீர் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். பிறகு அவற்றை நன்கு கலந்து கொள்ளவும். ரவை நன்றாக ஊறி வரும் வரை அப்படியே 15 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
அவை நன்றாக ஊறி வந்த பிறகு, மிக்சியில் போட்டு மாவு பதத்திற்கு நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
இதன்பின்னர், தோசைக் கல்லை சூடேற்றி அதில் மாவை ஊற்றவும். இப்போது, நீங்கள் எதிர்பார்த்த மொறு மொறு தோசை தயாராக இருக்கும்.