scorecardresearch

மீதமான இட்லியை வைத்து 10 நிமிடத்தில் ஈஸியா இப்படி முறுக்கு செஞ்சு பாருங்க !

வித்தியாசமான முறையில் முறுக்கு சுடுவது எப்படி என்பதைப் பற்றித்தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்படி முறுக்கு சுட்டு கொடுத்தால் இந்த முறுக்கை எதை வைத்து சுட்டு எடுத்தீங்க என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது .

மீதமான இட்லியை வைத்து 10 நிமிடத்தில் ஈஸியா இப்படி முறுக்கு செஞ்சு பாருங்க !

மீதமான இட்லியை வைத்து விதவிதமாக நிறைய பலகாரங்கள் செய்யலாம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் முறுக்கு சுடுவது எப்படி என்பதைப் பற்றித்தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்படி முறுக்கு சுட்டு கொடுத்தால் இந்த முறுக்கை எதை வைத்து சுட்டு எடுத்தீங்க என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது .

மீதமான 5 இட்லிக்கு வைத்து ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம்.  முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மீதமான இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு தண்ணீர் ஊற்றாமல் மைய அரைத்து இந்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

இதில் மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், எள்ளு – 1 ஸ்பூன், ஓமம் – 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, அரிசி மாவு – 1/4 கப், பொட்டுக்கடலை மாவு – 1/4 கப் எண்ணெய் 2 ஸ்பூன் இந்த பொருட்களை சேர்த்து பிசைய வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு இந்த மாவை பிசைந்து கொள்ளவும்.

முறுக்கு பிழியும் குழாய்க்குள் எண்ணெய்யை தடவி இதில் மாவை உருட்டி முறுக்கு அச்சில் போட்டு முறுக்கு பிழிந்து ஒரு தட்டில் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான மொறுமொறு முறுக்கு தயார்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Leftover idly make murukku within 10 minutes

Best of Express