டீயில் முக்கியமான எலுமிச்சை புல் டீ நமக்கு மிகவும் நன்மை தரும் ஒன்றாக இருக்கும். இந்நிலையில் இந்த எலுமிச்சை புலில் நல்ல நறுபணம் வரும். இந்நிலையில் இந்த டீ குடிப்பதால், உங்கள் மன அழுத்தத்தை, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
எலுமிச்சை புல், பாரம்பரிய முறையில் ஜீரண பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும். வாய்வு சமந்தமான நோய்களுக்கும் உதவுகிறது. இந்தில் உள்ள முக்கிய பொருள் குடலை ஓய்வாக உணரச் செய்கிறது.
இதனால் ஜீரணத்தை லேசாக்கி, வயிறு உப்புதல், வயிறு வலி, அஜீரணத்தை குறைக்கும்.
எலுமிச்சை புல்லில், பிளாபாய்ட்ஸ், பினாலிக் காம்பவுண்ட்ஸ் உள்ளது. ஆண்டி ஆக்ஸிடண்ட் நமது செல்களை சேதமடையாமல் பார்த்துகொள்ளும்.
இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த பண்புகள் உள்ளது. வைட்டமின் சி நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மோசமான இதய நோய், ஆர்தரிடிஸ் மற்றும் புற்று நோய்யை தடுக்கும் பண்புகள் கொண்டது.
இந்நிலையில் சில ஆய்வுகள், எலுமிச்சை டீ, நமது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது என்று கூறுகிறது. இதனால் இதய பாதிப்பு ஏற்படுவது குறையும்.
சிறுநீரகத்தில் உள்ள நஞ்சுகளை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகம் வழியாக இந்த நஞ்சுகள் செல்லும். இன்னும் சில ஆய்வுகளில், இதில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் பண்புகள் கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“