எலுமிச்சை தோலின் பயன்களை நாம் அடிக்கடி மறந்துவிடுவோம். இந்நிலையில் இதில் பல்வேரு நன்மைகள் இருக்கிறது.
இந்நிலையில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் எலுமிச்சை தோலை சேர்த்து, தண்ணீர், சுகர் சேர்க்கவும். தொடர்ந்து இதை பட்டை பொடியை சேர்க்கலாம். இதை நாம் பிரட்டோடு சேர்த்து சாப்பிடலாம்.
எலுமிச்சை தோலை பாதாம் ஆயில் அல்லது நலெண்ணெயில் சேர்க்கலாம். இதை நாம் பயன்படுத்தினால் , சருமம் பொலிவாக இருக்கும். இது சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கும்.

சிறு பூச்சிகள் கொல்லும் ஆற்றல் கொண்டது. எலுமிச்சை தோலை, நாப்த்தலின் பால்ஸ் , வினிகர், டிடர்ஜென்ட், எலுமிச்சை சாறை சேர்த்து ஒரு ஸ்பிரே பாடிலில் சேர்க்கவும். இதை பயன்படுத்தினால், சிறுபூச்சிகள் தொல்லை நீங்கும்.
இதுபோல எலுமிச்சை, தோலை துருவி, நாம் சாப்பிடும் காய்கறி சாலடில், சூப், இனிப்பு வகையில் சேர்த்து சாப்பிடலாம்.