Advertisment

பிரியாணிக்கு டஃப் கொடுக்கும் லெமன் சாதம்: இப்படி செய்து பாருங்க!

நிலக் கடலை, கடலைப் பருப்பு சேர்த்து ஒரு முறை இப்படி லெமன் சாதம் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
lemon ric

புதுமையான, சுவையான லெமன் சாதம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

சாதம்
தேங்காய் எண்ணெய் 
எலுமிச்சை சாறு
நிலக் கடலை
கடலைப் பருப்பு
இஞ்சி, பூண்டு பேஸ்ட்
தக்காளி 
பச்சை மிளகாய்

செய்முறை 

முதலில் வேக வைத்த சூடான சாதம் எடுத்து அதில் தேங்காய் எண்ணெய்  ஊற்றவும். மிதமாக சாதம் உடையாமல் கிளறவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய்  ஊற்றி  கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, பெருஙகாயம், 5 பச்சை மிளகாய் சேர்க்கவும். அடுத்து பெரிய வெங்காயம் போட்டு இஞ்சி, பூண்டு பேஸ்ட் போடவும்.  

அடுத்தாக தக்காளி, உப்பு சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து மஞ்சள் தூளும் போட்டு கிளறவும். தொக்கு மாறி வந்ததும் எலுமிச்சை சாறு, கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவவும். லேசான சூடு வந்ததும் இறக்கி சாதத்தில் போட்டு கிளறவும். மிதமுள்ள கொத்தமல்லியையும் போட்டு கிளறவும். அவ்வளவு தான் புதுமையான, சுவையான லெமன் சாதம் ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment