சமையலுக்கும் ஜூஸ்க்கும் பயன்படுத்தப்படும் எலுமிச்சம் பழம் தோலை வைத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க முடியும் என்று டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
டிப்ஸ் 1: காய்கறிகளை நறுக்கும் பலகை மேல் இருக்கும் அழுக்கை போக்க எலுமிச்சை பழம் தோலின் உட்புரத்தால் தேய்க்கும் போது அதில் இருக்கும் கிருமிகள் அழிந்து சுத்தமாகும்.
டிப்ஸ் 2: பாத்திரம் விளக்கும் சிங் அழுக்காக இருக்கு என்றால் எலுமிச்சை பழம் தோலை வைத்து தேய்க்கலாம்.
டிப்ஸ் 3: செம்பு பாத்திரம் சுத்தமாக பல பலவென்று இருக்க எலுமிச்சை பழம் தோல் வைத்து தேய்க்கலாம்.
Advertisment
Advertisements
டிப்ஸ் 4: ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை பழம் தோல் போட்டு தண்ணீர் ஊற்றி சூடு செய்து அந்த பாத்திரத்தை அவனில் வைத்தால் அந்த அவனில் இருக்கும் கெட்ட நாற்றம் வெளியேறிவிடும்.
இப்படியாக பல நன்மைகள் இந்த எலுமிச்சை தோளுக்கு உண்டு. அப்படிப்பட்ட தோலை வைத்து கெட்ட கொழுப்பை குறைக்கும் ஒரு பானம் எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.
டிப்ஸ் 1: எலுமிச்சம் பழம் சாறுடன் இஞ்சி சாறு சிறிது சேர்த்து சர்க்கரை இல்லாமல் தினமும் எப்போது வேண்டுமானாலும் குடித்து வர உடல் எடை குறையும்.
எலுமிச்சை பழம் தோலில் நார்ச்சத்து மற்றும் அதிகப்படியான வைட்டமின் சி உள்ளது. அதேபோல பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் உள்ளது.
அதனால் பல் சொத்தை ஏற்படாமல் தடுக்கும். தோல் நோய்களான பங்கஸ் தொற்று வராமல் பாதுகாக்கும். உயிர் அணுக்கள் சிதைப்பதை தடுக்கும் ஆற்றல் இந்த எலுமிச்சை பழம் தோலிற்கு உள்ளது.
தோல் ஆரோக்கியம் மற்றும் இளம் தோற்றத்தை பாதுகாக்க உதவும். வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் கெட்ட கொழுப்பு, ரத்த சர்கரை அளவு மற்றும் பிபி அளவுகளை குறைக்க உதவும்.
புற்றுநோய் வராமல் தடுக்கும் அனைத்து வகையான புற்றுநோய் வளர்ச்சி செல்களையும் தடுத்து போராடும். பித்தப்பையில் வரக்கூடிய கற்கள் வராமல் தடுக்கும். அதேபோல உடலில் ஏற்படும் காயங்களையும் புண்களையும் விரைவில் ஆற்றும்.
எலுமிச்சை சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
செய்முறை: எலுமிச்சை பழத்தை எடுத்து தோல் மட்டும் தனியாக உரித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் காலிபிளவர், தக்காளி, முட்டைகோஸ், பச்சை மிளகாய், பூண்டு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த எலுமிச்சை தோலை போடவும். பின்னர் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு, சீரகம் போட்டு கொதிக்க விட்டு எடுத்தால் சூப் ரெடி ஆகிவிடும்.
அடுத்ததாக லெமன் டீ எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சை பழம் தோல் போட்டு கொதிக்க விட்டு இஞ்சி போட்டு நன்கு கொதிக்க விடவும். பின்னர் இறக்குவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு புதினாவை போட்டு கொதிக்க விடவும். அவ்வளவு தான் லெமன் தோல் டீ ரெடி தினமும் காலையில் குடிக்க கெட்ட கொழுப்பு குறையும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.