கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அப்படியாக கோடையை குளிர்விக்க குடிக்க வேண்டிய லெமனேடு எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
பச்சை எலுமிச்சை - 5 ஐஸ் கட்டிகள் உப்பு சர்க்கரை - 3 மேசைக்கரண்டி கன்டென்ஸ்டு மில்க் - 1 கப் தண்ணீர்
செய்முறை
பச்சை எலுமிச்சையை இரண்டாக நறுக்கி சாறை பிழிந்து கொள்ளவும். பிளெண்டரில் ஐஸ் கட்டிகள், எலுமிச்சை சாறு, உப்பு, சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க், தண்ணீர் சேர்த்து பிளெண்ட் செய்யவும்.
லெமனேடு -ஐ அசெம்பிள் செய்ய கண்ணாடி டம்ளரில் ஐஸ் கட்டிகள், தயார் செய்த லெமனேடு -ஐ ஊற்றி டம்ளரின் மேலே எலுமிச்சை துண்டை வைத்து பரிமாறவும்.