ஈரலில் கெட்டுப்போன நச்சுகள்... 15 நாளில் சுத்தம் செய்யும் இந்த டிரிங்க்; இப்படி செய்து குடிங்க: டாக்டர் சுப்பிரமணியன் நாச்சியப்பன்

சுகாதாரமற்ற தண்ணீர் குடிப்பது, அதிகமாக இறைச்சி வகைகள் சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த பொருட்கள் எடுத்துக் கொள்வது, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற காரணங்களால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படக் கூடும்.

சுகாதாரமற்ற தண்ணீர் குடிப்பது, அதிகமாக இறைச்சி வகைகள் சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த பொருட்கள் எடுத்துக் கொள்வது, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற காரணங்களால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படக் கூடும்.

author-image
WebDesk
New Update
Doctor Subramanian Nachiyappan

நமது உடலில் அதிகமாக வேலை செய்யக் கூடிய உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று என்று மருத்துவர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கல்லீரலை சரியான முறையில் பராமரிப்பதன் அவசியம் குறித்து ஹெல்த் கஃபே தமிழ் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

உடலில் கல்லீரல் இயக்கம் சரியாக இல்லையென்றால் முகத்தில் கரும்புள்ளிகள் காணப்படும் என்று மருத்துவர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் கூறுகிறார். மேலும், இளநரை, திடீரென உடல் எடை இழப்பு அல்லது அதிகரிப்பு, இரத்த சிவப்பணுக்களில் குறைவு, சிறுநீர் மஞ்சளாக வெளியேறுவது, உடல் சோர்வு மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் இருந்தாலும் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவதற்கான சில காரணங்களை மருத்துவர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் கூறியுள்ளார். அதன்படி, சுகாதாரமற்ற தண்ணீர் குடிப்பது, அதிகமாக இறைச்சி வகைகள் சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த பொருட்கள் எடுத்துக் கொள்வது, ஈரலில் கெட்டுப்போன நச்சுகள்... 15 நாளில் சுத்தம் செய்யும் இந்த டிரிங்க்; இப்படி செய்து குடிங்க: டாக்டர் சுப்பிரமணியன் நாச்சியப்பன்

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற காரணங்களால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படக் கூடும்.

Advertisment
Advertisements

அதன்படி, சில உணவு முறை மாற்றங்களை செய்வதன் மூலம் கல்லீரலை சுத்தப்படுத்தலாம் என்று மருத்துவர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் அறிவுறுத்துகிறார். இதற்காக 15 நாட்களுக்கு கரும்புச் சாறு குடிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், சாப்பிடுவதற்கு முன்பாக தேனில் கடுகு ரோகிணி பொடி கலந்து குடிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தையும் பின்பற்றும் போது கல்லீரலில் இருக்கும் நச்சுகளை  வெளியேற்ற முடியும் என்று மருத்துவர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் வலியுறுத்துகிறார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Basic tips to keep your liver healthy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: