நுரையீரலை சுத்தம் செய்து, உடலில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையிலான ஒரு ரசம் செய்வது எப்படி பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் – 3
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – 3 ஸ்பூன்
வெந்தயம் – சிறிதளவு
வரமிளகாய் – 2
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – பெரியது ஒரு துண்டு
பூண்டு – 5-6 பல்லு
வெங்காயம் – 1 பெரியது
எண்ணெய் / நெய் – சிறிதளவு
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
முதலில் நெல்லிக்காயை வெட்டி, மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு, மிளகு, சீரகம், கொத்தமல்லி, வெந்தயம், வரமிளகாய், ஆகியவற்றை ஒன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இந்த கலவையை, மிக்ஸியில் சேர்த்து அதனுடன், இஞ்சி, பூண்டு, வெங்காயம், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு வாணலில், எண்ணெய் அல்லது நெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, பூண்டு, ஒரு வரமிளகாய், சேர்த்து தாளித்து, அரைசத்து வைத்திருக்கும் பேஸ்டை அதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.
அதன்பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் பேஸ்டை சேர்த்து கிளறிவிட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். ரசம் கொதிக்கும்போது ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்ப்பது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“