மிகவும் சத்து நிறைந்த, ரொம்பவே ஹெல்தியான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான சத்துக்களை கொண்ட கருவேப்பிலையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு
சின்ன வெங்காயம்
வர மிளகாய்
வறுத்த நிலக் கடலை
புளி
துருவிய தேங்காய்
கருவேப்பிலை
எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய்யை சேர்த்து காய்ந்ததும் அதனுடன் உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம், வர மிளகாய், நிலக் கடலை ஆகியவற்றை நன்கு வறுக்கவும்.
பின்னர் துருவிய தேங்காய், புளி இவை அனைத்தையும் நன்கு வதக்கி அதனுடன் கறிவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும்.
அனைத்தும் வதங்கியதும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். பின்னர் எப்போதும் போல கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். இதை சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா அனைத்திற்க்கும் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“