Advertisment

கிடுகிடுவென சுகர் குறைந்தாலும் ஆபத்து: உணவில் இந்த ரூல் 15-ஐ அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

இரத்த சர்க்கரை அளவு திடீர் என அதிகப்படியாக குறைகிறதா?; சுகர் அதிகரிப்பை விட ஆபத்தானது; எனவே ரூல் 15 ஐ பயன்படுத்துங்கள்

author-image
WebDesk
Sep 03, 2022 23:00 IST
சுகர் அறிகுறி இருக்கிறதா? இந்த 5 உணவுகளை தள்ளி வையுங்க!

அதிக குளுக்கோஸ் அளவு உள்ளவர்கள் தங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கார்போஹைட்ரேட்டுகளை குறைக்க முனைகின்றனர். இருப்பினும், இது ஒருவரை இரத்தச் சர்க்கரைக் குறைவின் (ஹைப்போகிளைசீமியா) ஆபத்தில் ஆழ்த்துகிறது, அதாவது உடலின் இரத்த சர்க்கரை அளவு நிலையான வரம்பைக் காட்டிலும் குறைவாக இருக்கும் நிலைக்கு தள்ளுகிறது என உணவியல் நிபுணர் கரிமா கூறுகிறார். இதைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பேசியுள்ள நிபுணர் கரிமா, “இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது ஆபத்தானது. ஆனால், குறைந்த இரத்த சர்க்கரை அளவு (இயல்பை விட) இன்னும் ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

மேலும், இரத்தச் சர்க்கரைக் குறைவில், இரத்தச் சர்க்கரை அளவு 6-70 mg/dl ஆகக் குறைகிறது, சில சமயங்களில், அது இன்னும் குறைவாக இருக்கும் என்றும் அவர் கூறினார். கூடுதலாக, "40 க்கும் குறைவாக இருந்தால், ஒரு நோயாளி கோமா நிலைக்குச் செல்லலாம்,” என்று கரிமா எச்சரித்தார்.

இதையும் படியுங்கள்: தினமும் காலையில் 2 கிராம்பு… இப்படி சாப்பிட்டால் நிறைய நன்மை இருக்கு!

இரத்த சர்க்கரை அளவு ஏன் குறைகிறது?

உணவியல் நிபுணர் கரிமாவின் கூற்றுப்படி, நீங்கள் போதுமான அளவு சாப்பிடாமல் இருந்தால், அதிக இன்சுலின் எடுத்துக் கொண்டால், அதிகப்படியான உடல் உழைப்பு அல்லது அதிக மது அருந்தினால் இந்த நிலை ஏற்படும். "நோயாளி நிறைய வியர்வை, குளிர் மற்றும் தலைவலியை அனுபவிக்கலாம், சுவையான உணவுப் பொருட்களுக்கு ஏங்கலாம் மற்றும் பல சந்தர்ப்பங்களில், சுயநினைவை இழக்கலாம்," என்று அவர் இரத்தச் சர்க்கரைக் குறைவின் சாத்தியமான அறிகுறிகளை விவரித்தார்.

விதி 15

உங்கள் இரத்த சர்க்கரை நிலையான வரம்பிற்குக் கீழே குறைந்திருந்தால், '15 விதி'யைப் பின்பற்றுமாறு கரிமா பரிந்துரைத்தார். அது என்ன என்று யோசிக்கிறீர்களா? அவர் அதை பின்வருமாறு விவரித்தார்.

* உங்கள் இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்கவும்.

*சர்க்கரை 70 mg/dl க்கும் குறைவாக இருந்தால், 15 என்ற விதியைப் பின்பற்றவும், அதாவது வேகமாக செயல்படும் கார்போஹைட்ரேட்டுகளான 3 டீஸ்பூன் சர்க்கரை, குளுக்கோஸ் அல்லது தேன், அரை கப் டயட் அல்லாத கோக் அல்லது 3 மிட்டாய்களை 15 கிராம் அளவுக்கு சாப்பிடலாம்.”

* 15 நிமிடங்கள் காத்திருக்கவும்.

* உங்கள் சர்க்கரை அளவை மீண்டும் சரிபார்க்கவும். இரத்த சர்க்கரை அளவில் அதிகரிப்பு இல்லாவிட்டால், இரத்த குளுக்கோஸ் 100 mg/dl ஐ விட அதிகமாக இருக்கும் வரை 15 என்ற விதியை மீண்டும் செய்யவும்.

குருகிராமில் உள்ள நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உட்சுரப்பியல் நிபுணர் மற்றும் நீரிழிவு நிபுணர் டாக்டர் கே.எஸ்.பிராரின் கூற்றுப்படி, 15-15 விதி என்றும் அழைக்கப்படும் இந்த நுட்பம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 70 மி.கி/டி.எல்.க்குக் கீழே குறையும் போது பயனுள்ளதாக இருக்கும். "நீங்கள் கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடும்போது, ​​​​உங்கள் உடல் அவற்றை உடைத்து குளுக்கோஸாக மாற்றுகிறது. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது, ”என்று அவர் கூறினார்.

இருப்பினும், உங்கள் இரத்த சர்க்கரை 55 mg/dL க்கு கீழ் இருந்தால், நீங்கள் 15 விதியைப் பயன்படுத்தக்கூடாது, டாக்டர் ப்ரார் கூறினார்.

"குறைந்த இரத்த குளுக்கோஸ் அளவை சரிசெய்ய இளம் குழந்தைகளுக்கு பொதுவாக 15 கிராமுக்கும் குறைவான கார்போஹைட்ரேட்டுகள் தேவைப்படுகின்றன: பிறந்த குழந்தைகளுக்கு 6 கிராம், குழந்தைகளுக்கு 8 கிராம் மற்றும் சிறு குழந்தைகளுக்கு 10 கிராம் தேவைப்படலாம். இது நோயாளிக்கு ஏற்றாற்போல் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், எனவே உங்கள் நீரிழிவு நிபுணருடன் தேவையான அளவைப் பற்றி விவாதிக்கவும்" என்று அமெரிக்க நீரிழிவு சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Diabetes #Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment