அதிக கார்போஹைட்ரேட் இல்லாத இரவு உணவுக்கு இந்த அரிசி: சுகர் பேஷன்ட்ஸ் நோட் பண்ணுங்க!
"தினையரிசி மற்றும் வரகரிசி போன்றவை சர்க்கரை நோய் இருக்கும் மக்களுக்கு ஏற்ற தானியங்கள் ஆகும். இவற்றில் இருக்கும் சிறப்பு என்னவென்றால், இந்த தானியங்களில் ஏராளமான கனிம சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன." என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
சித்த மருத்துவர் சிவராமன் ஏராளமான மருத்துவ குறிப்புகளை வழங்கி வருகிறார். நாம் அன்றாட உண்ணும் உணவுகளில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து மிகவும் தெளிவாகவும், அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் அவர் கூறி வருகிறார். அந்த வகையில், அதிக கார்போஹைட்ரேட் இல்லாத இரவு உணவுகள் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.
Advertisment
இது குறித்து யூடியூப் வீடியோ ஒன்றில் மருத்துவர் சிவராமன் பேசுகையில், "இரவில் அதிக கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகளை நீங்கள் எடுக்க விரும்பினால், சிறுதானியங்களை நீங்கள் சாப்பிட்டு வரலாம். தினை, ராகி, கம்பு, சோளம், குதிரை வாலி ஆகியவற்றில் தயார் செய்யப்படும் உணவுகளை சாப்பிடலாம்.
அதிலும் குறிப்பாக தினையரிசி மற்றும் வரகரிசி போன்றவை சர்க்கரை நோய் இருக்கும் மக்களுக்கு ஏற்ற தானியங்கள் ஆகும். இவற்றில் இருக்கும் சிறப்பு என்னவென்றால், இந்த தானியங்களில் ஏராளமான கனிம சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. மேலும், சர்க்கரையை வேகமாக இரத்தத்தில் கலக்க விடாத குறைந்த கிளைசெமிக் தன்மை இந்த தானியங்களில் மிகுந்து காணப்படுகிறது.
இந்த தானியங்களை உப்புமா, கிச்சடி, பொங்கல் செய்து சாப்பிடலாம். ஆனால், சர்க்கரை நோயாளிகள் கஞ்சியாக சாப்பிடக்கூடாது. அது வேகமாக இரத்தத்தில் கலந்து விடும். சாதாரண அரிசியைப் போல் குக்கரில் வேக வைத்து சாப்பிடலாம்." என்று அவர் கூறியுள்ளார்.