Advertisment

லோ கிளைசீமிக் உணவுகள் இவை தான்… சர்க்கரை நோயாளிகள் நோட் பண்ணுங்க!

சர்க்கரை நோயாளிகள் அதிகம் எடுத்து கொள்ள வேண்டிய லோ கிளைசீமிக் உணவுகள் பற்றி சித்த மருத்துவர் சிவராமன் கூறுவது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
diabeties

லோ கிளைசீமிக் உணவுகள்

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் பெரும்பாலானோருக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று உணவுப் பழக்கம்.

Advertisment

எந்த உணவை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்பதில் பலருக்கு குழப்பம் இருந்து வருகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவுப் பட்டியலை இப்போது பார்ப்போம்.

உங்களிடம் போதுமான இன்சுலின் இல்லையென்றால், அதிக குளுக்கோஸ் அளவுகள் உங்கள் இரத்தத்தில் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும். காலப்போக்கில் குளுக்கோஸின் செறிவு படிப்படியாக உயர்ந்தால், இது இரத்த சர்க்கரை அதிகரிப்பு என குறிப்பிடப்படுகிறது. சாப்பிட்ட பிறகு இது நிகழலாம்.

இருப்பினும், உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யாத சில உணவு பொருட்கள் பற்றி மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

Advertisment
Advertisement

கிளைசெமிக் குறியீடு: கிளைசெமிக் குறியீடு என்பது நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட் (குளுக்கோஸ்) எவ்வளவு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்கிற அளவு தான் கிளைசெமிக் குறியீடு. இந்த கிளைசெமிக் குறியீடு 100 என்கிற அளவீட்டிற்குள் குறிக்கப்படுகிறது. இதுதான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவாகக் கணக்கிடப்படுகிறது.

பாரம்பரிய அரிசி வகைகள் : கைக்குத்தல் போன்ற பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் சிறுதானியங்களை எடுத்து கொள்ளலாம். அதிலும் வேறு நிறத்தில் இருப்பதை எடுத்து கொள்ளலாம். கார்போஹட்ரேட்டுகள் குறைவாகவும் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளலாம். உடலுக்கு தேவையான வைட்டமின்கள், கொழுப்புகள் மற்றும் புரதங்களை சேர்த்து கொள்ளலாம்.

பீன்ஸ் வகைகள், பழங்கள் குறிப்பாக சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை எடுத்து கொள்ளலாம். 

low-glycemic foods for diabetics | Dr.G.Sivaraman | Health Basket Health Tips

நெல்லியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கணையத்தின் நல்ல செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. ஒரு கப் பாகற்காய் சாற்றில் ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு கலந்து சில மாதங்களுக்கு தினமும் குடித்து வரலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Diabetes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment