scorecardresearch

எண்ணெய் குடிக்காத உளுந்த வடை: ஒருமுறை இப்படி செய்து பாருங்க!

குறிப்பாக எல்லா வடைகளிலும் எண்ணெய் அதிகமாக குடிக்கும் ஒன்று உளுந்து வடை. இதனாலே உளுந்து வடையை நாம் சாப்பிட மாட்டோம். இந்நிலையில் நாம் எண்ணெய் அதிகமாக குடிக்காத உளுந்து வடையை எப்படி செய்வதை என்பதை தெரிந்துகொள்வோம்.

ஒரு கப் உளுந்தை நன்றாக கழுவி, அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம்  நன்றாக ஊறவைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, ஊறவைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து உளுந்தை மிக்ஸியில் சேர்த்து, அத்துடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதுபோல் 3 முறை தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும். உளுந்து ஊரவைத்த தண்ணீரை பயன்படுத்தவும். உளுந்து அரைபட்டதும். அதில் 4 துண்டுகள் உருளைகிழங்கை சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து இந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி, அதில் உப்பு, நறுக்கிய  வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பில்லை, இடித்த மிளகு, 2 ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்து கலக்கவும்.

இப்போது வடை போட மாவு  ரெடி. வழக்கமாக வடைக்கு தேவையான எண்ணய் எடுத்துக்கொள்ளுங்கள். குறைவாகவே எடுத்துக்கொள்ளலாம், இப்போது வடை தட்டி அதில் பொறித்து எடுங்கள். கண்டிப்பாக வடை எண்ணையை குடிக்காது.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Low oil observing vadai news technique