லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: சுவையான மாங்காய் சாதம்; ஈஸி ஸ்டெப்ஸ் இதுதான்!

லஞ்ச் பாக்ஸ்க்கு சுவையான மாங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். பிள்ளைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

லஞ்ச் பாக்ஸ்க்கு சுவையான மாங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். பிள்ளைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

author-image
WebDesk
New Update
New Project (14)

சீசனில் ட்ரை பண்ண ஒரு சுவையான சாதம் தான் மாங்காய் சாதம். இப்பவே ட்ரை பண்ணுங்கள். சுவையான மாங்காய் சாதம் லஞ்ச்க்கு எப்படி செய்வது என்று வேலு சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்  
மாங்காய் - 1 பெரியது  
நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்  
முந்திரி - 10-12  
காய்ந்த மிளகாய் - 2-3  
பச்சை மிளகாய் - 1-2  
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு 
கொத்தமல்லி தழை  

செய்முறை:

Advertisment
Advertisements

குளிர வைத்த சாதத்தை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து, உதிரியாக வைத்துக் கொள்ளவும். (புதிதாக சமைத்த சாதமாக இருந்தால், அதை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்). மாங்காயின் தோலை நீக்கி, துருவி வைத்துக் கொள்ளவும் அல்லது மெல்லியதாக நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.
கடுகு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
வேர்க்கடலை, முந்திரி சேர்த்து வறுத்து எடுக்கவும்.

காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மஞ்சள்தூள் சேர்த்து ஒரு முறை கலந்து விடவும். இப்போது துருவிய அல்லது நறுக்கிய மாங்காயைச் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும். மாங்காய் ரொம்ப வதங்கத் தேவையில்லை, அதன் புளிப்புத்தன்மை அப்படியே இருக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
 
வதக்கிய மாங்காய் கலவையுடன், ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து மெதுவாக கிளறவும். சாதம் உடையாமல் கவனமாகக் கிளற வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து, மசாலா சாதத்துடன் நன்றாக கலக்கும் வரை கிளறவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சூடாகப் பரிமாறவும்.

raw mango

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: